ஜெம் வீரமணிக்கு எதிரான வழக்குகளை சிபிஐ விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி

ஜெம் வீரமணிக்கு எதிரான வழக்குகளை சிபிஐ விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி
Updated on: 
1 min read

சென்னை: ஜெம் வீரமணிக்கு எதி​ரான பாலியல் வழக்​கு​களை சிபிஐ விசா​ரணைக்கு மாற்​றக்​கோரி தாக்​கல் செய்​யப்​பட்ட மனு வாபஸ் பெறப்​பட்​டதையடுத்​து, அந்த மனுவை உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​தது.

சென்​னையைச் சேர்ந்த வழக்​கறிஞர் சி.​ராஜசேகரன் உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு: குற்றம்சாட்டப்பட்ட ஜெம் வீரமணிக்கு எதி​ரான குழந்​தைகள் நல ஆர்​வலர் அளித்த பென் டிரைவ் ஆதா​ரத்​தின் அடிப்​படை​யில் வீரமணி, சாந்தி உள்​ளிட்​டோருக்கு எதி​ராக சென்னை மத்​திய குற்​றப்பிரிவு போலீ​ஸார் போக்சோ சட்​டத்​தின் கீழ் பாலியல் வன்​கொடுமை வழக்​கு​களை பதிவு செய்​துள்​ளனர்.

வீரமணி அனைத்து அரசி​யல் பிர​முகர்​களு​ட​னும் நெருங்​கிய தொடர்​பில் இருந்​தவர் என்​ப​தா​லும், இந்த வழக்​கில் போலீஸ் உயர் அதி​காரி​களுக்​கும் தொடர்பு இருப்​ப​தா​லும் மாநில போலீ​ஸார் விசா​ரணை நடத்​தி​னால் அது ஏற்​புடைய​தாக இருக்​காது. எனவே இந்த வழக்கை சிபிஐ அல்லது சிறப்பு புல​னாய்வுக்​குழு விசா​ரணைக்கு மாற்ற வேண்​டும்.

மேலும் இந்த வழக்கு தொடர்பான போட்டோ, வீடியோக்​களை ஊடகங்​கள், சமூக வலை​தளங்​கள் வெளி​யிட தடை விதிக்க வேண்​டும் என கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி, நீதிபதி ஜி.அருள்​முரு​கன் ஆகி யோர் அடங்​கிய அமர்​வில் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புல​னாய்​வுக் குழு அமைத்து விசாரணை நடத்தி வரு​வ​தால் மனுவை வாபஸ் பெற அனு​ம​திக்க வேண்​டும் என மனு​தா​ரர் தரப்​பில் கோரப்​பட்​டது. அப்​போது தலைமை நீதிப​தி, இந்த மனுவை தாக்​கல் செய்ய என்ன நிர்​பந்​தம் ஏற்​பட்​டது என கேள்வி எழுப்​பி​னார்.

அதற்கு மனு​தா​ரர் தரப்​பில், இந்த மனுவை தாக்​கல் செய்​த​பிறகே தமிழக அரசு சிறப்பு புல​னாய்​வுக் குழுவை அமைத்து உத்​தர​விட்​ட​தாக தெரிவிக்​கப்​பட்​டது. அதையேற்ற நீதிப​தி​கள், மனுவை வாபஸ் பெற அனு​ம​தித்​து தள்​ளு​படி செய்​து உத்​தர​விட்​டுள்​ளனர்​.

ஜெம் வீரமணிக்கு எதிரான வழக்குகளை சிபிஐ விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி
பயணிகளுக்கு இடையூறாக அதிக சத்தத்துடன் செல்போன் பயன்படுத்தினால் 6 மாதம் சிறை: தெற்கு ரயில்வே எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in