தேர்தலை முன்னிட்டு சென்னையில் சிஎஸ்கே விளையாடும் இரு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை வேறு தேதிக்கு மாற்றக்கோரி வழக்கு

தேர்தலை முன்னிட்டு சென்னையில் சிஎஸ்கே விளையாடும் இரு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை வேறு தேதிக்கு மாற்றக்கோரி வழக்கு
Updated on
1 min read

சென்னை: சட்​டப்​பேரவை தேர்​தலை முன்​னிட்டு சென்​னை​யில் சூப்​பர் கிங்ஸ் அணி​ பங்​கேற்​கும் இரு ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டிகளை​யும் வேறு தேதி​களுக்கு மாற்​றக்​கோரி, சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக, சேப்​பாக்​கம் - திரு​வல்​லிக்​கேணி தொகுதி வாக்​காளர் டி.பிர​பாகரன் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​துள்ள மனு​வில் குறிப்​பிட்​டுள்​ள​தாவது: தமிழகத்​தில் சட்​டப்​பேரவை தேர்​தல் வரும் ஏப்​.23 அன்று நடை​பெறவுள்​ளது. தேர்​தலுக்​கான வேட்​புமனு தாக்​கல் வரும் மார்ச் 30-ம் தேதி தொடங்​கு​கிறது.

இந்​நிலை​யில் ஏப்.4 மற்​றும் ஏப்​.11 ஆகிய தேதி​களில் சேப்​பாக்​கம் மைதானத்​தில் சென்னை சூப்​பர் கிங்ஸ் அணி பங்​கேற்​கும் கிரிக்​கெட் போட்​டிகள் நடை​பெறவுள்​ளது. தேர்​தல் நேரத்​தில் சேப்​பாக்​கம் மைதானத்​தில் நடை​பெறவுள்ள போட்​டிகளை வேறு தேதிக்கு மாற்ற உத்​தர​விட வேண்​டும்.

சென்னை சூப்​பர் கிங்ஸ் அணி பங்​கேற்​கும் போட்​டிகளை தேர்​தல் முடிந்த பிறகு நடத்​திக் கொள்ள ஐபிஎல் நிர்​வாகத்​துக்கு அறி​வுறுத்த வேண்​டும். சேப்​பாக்​கத்​தில் கிரிக்​கெட் போட்டி நடத்​தப்​பட்​டால் கிரிக்​கெட் போட்​டியைக் காண வரும் ரசிகர்​களுக்​கும், கிரிக்​கெட் வீரர்​களுக்​கும் பாது​காப்பை உறுதி செய்ய வேண்​டிய கட்​டா​யம் போலீ​ஸாருக்கு ஏற்​படும்.

ஐபிஎல் போட்​டிகளின் போது கிரிக்​கெட் ரசிகர்​கள் என்ற போர்​வை​யில் மைதானத்​துக்​குள் தங்​களது சின்​னத்​துடன் கட்சியினர் பிர​ச்சா​ரம் செய்​வர் என்​ப​தால் தேவையற்ற சட்​டம் - ஒழுங்கு பிரச்​சினை ஏற்​படும்.

எனவே, ஏப்.4 மற்​றும் ஏப்​.11 ஆகிய தேதி​களில் நடை​பெறவுள்ள கிரிக்​கெட் போட்​டிகளை தமிழகத்​தில் தேர்​தல் முடிந்த பிறகு நடத்​திக் கொள்​ளு​மாறு போட்டி ஏற்​பாட்​டாளர்​களை அறி​வுறுத்த தேர்​தல் ஆணை​யத்​துக்கு உத்​தர​விட வேண்​டும்.

ஒரு​வேளை கிரிக்​கெட் போட்​டிகளுக்​கான தேதி​களை மாற்ற முடி​யாது எனக் கூறி​னால் தேர்​தல் நடத்தை விதி​களை கடுமை​யாக அமல்​படுத்​த​வும், அரசி​யல் கட்​சிகளின் சி்ன்​னங்​கள், கொடிகள் என எதை​யும் மைதானத்​துக்​குள் உள்​ளே​யும், வெளி​யே​யும் காட்​சிப்​படுத்த அனு​ம​திக்​கக் கூடாது என ஐபிஎல் நிர்​வாத்​துக்கு உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் தெரி​வித்​துள்​ளார். இந்த மனு விரை​வில் விசா​ரணைக்கு வரவுள்​ளது.

தேர்தலை முன்னிட்டு சென்னையில் சிஎஸ்கே விளையாடும் இரு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை வேறு தேதிக்கு மாற்றக்கோரி வழக்கு
காஸ் சிலிண்டர், உரங்கள் தட்டுப்பாடின்றி விநியோகமா? - பிரதமரின் கருத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in