பேரறிவாளனின் வழக்கறிஞர் பதிவு சட்ட விரோதம் என அறிவிக்கக் கோரி வழக்கு

பார் கவுன்சில் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
பேரறிவாளனின் வழக்கறிஞர் பதிவு சட்ட விரோதம் என அறிவிக்கக் கோரி வழக்கு
Updated on
2 min read

சென்னை: முன்​னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்​கில் ஆயுள் தண்​டனை விதிக்​கப்​பட்ட பேரறி​வாளனை வழக்​கறிஞ​ராக பதிவு செய்​திருப்​பது சட்ட விரோதம் என்று அறிவிக்​கக் கோரி தொடரப்​பட்ட வழக்​கில், அகில இந்​திய பார் கவுன்​சில், தமிழ்​நாடு, புதுச்​சேரி பார் கவுன்​சில் 4 வார காலத்துக்​குள் பதில் அளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

இது தொடர்​பாக சென்னை நுங்​கம்​பாக்​கத்​தைச் சேர்ந்த பி.ர​வி​ராஜா என்​பவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில் கூறி​யிருந்​த​தாவது:

வழக்​கறிஞர் தொழிலுக்கு என தனிப்​பட்ட மாண்​பு​கள், ஒழுக்க நெறி​முறை​கள் உள்​ளன. அதற்​காகத்​தான் வழக்​கறிஞர் சட்​டமே தனி​யாக உரு​வாக்​கப்​பட்டு விதி​முறை​கள் வகுக்​கப்பட்​டுள்​ளன. இது வணிக ரீதியி​லான தொழில் அல்ல. சட்​டத்​தின் துணை​கொண்டு நீதியை நிலை​நாட்​டும் உன்​னத​மான தொழில். ஆனால், இந்த தொழில் நெறிகளை மீறி பார் கவுன்​சில் நிர்​வாகம் கொலைக் குற்​றத்​தில் ஈடுபட்ட விடு​தலைப்​ புலிகள் ஆதரவாளரான பேரறி​வாளனை வழக்​கறிஞ​ராக பதிவு செய்திருப்பது கடும் விமர்​சனத்​துக்கு உரியது.

முன்​னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்​கில் ஆயுள் தண்டனை விதிக்​கப்​பட்டு 30 ஆண்​டு​களுக்​கும் மேலாக சிறை​யில் தண்​டனை அனுப​வித்த பேரறி​வாளன், உச்ச நீதி​மன்ற உத்​தர​வுப்​படி கடந்த 2022-ம் ஆண்டு முன்​கூட்​டியே விடுவிக்​கப்​பட்​டார். அவர் கொலைக் குற்​றத்​தில் ஈடு​பட​வில்லை என்று நீதி​மன்​றம் ஒரு​போதும் கூற​வில்​லை.

இந்த சூழலில் கடந்த ஏப்​.24-ம் தேதி பேரறி​வாளன், பெங்களூருவில் உள்ள தனி​யார் சட்​டக் கல்​லூரி​யில் சட்​டப் படிப்பை முடித்துள்​ளார் என்று கூறி அவரை வழக்​கறிஞ​ராக தமிழ்​நாடு, புதுச்​சேரி பார் கவுன்​சில் பதிவு செய்​திருப்​பது கடும் ஆட்சேபத்​துக்கு உரியது. அவரது பதிவை முன்​கூட்டி வெளிப்படையாக பார் கவுன்​சில் நிர்​வாகி​களால் அறிவிக்​காதது ஏன் என்ற கேள்வி எழுகிறது. பார் கவுன்​சிலுக்கு தேர்​தல் நடத்தப்பட்டு வாக்​கு​கள் எண்​ணப்​பட்டு வரும் சூழலில், அவசர கதி​யில் பேரறி​வாளனை வழக்​கறிஞ​ராக பதிவு செய்​திருப்​பது பல்​வேறு சந்​தேகங்​களை எழுப்​பு​கிறது.

வழக்​கறிஞர் சட்​டத்​தின்​படி கொலை, கொள்​ளை, பாலியல் வன்​முறை சம்​பவங்​களில் ஈடு​பட்டு குற்​றச்​சாட்டு நிரூபிக்​கப்​பட்டு தண்​டனை விதிக்​கப்​பட்​ட​வர்​களை ஒரு​போதும் வழக்​கறிஞ​ராக பதிவு செய்​யக்​கூ​டாது. முன்​னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்​கில் தண்​டிக்​கப்​பட்ட பேரறி​வாளனை வழக்​கறிஞ​ராக பதிவு செய்​திருப்​பது வழக்​கறிஞர் சட்​டத்​துக்கு விரோத​மானது. இதை அனு​ம​தித்​தால் எதிர்​காலத்​தில் பெண்​களை வன்​கொடுமை செய்த குற்​ற​வாளி​கூட வழக்​கறிஞர் ஆகலாம் என்ற நிலை உரு​வாகும். எனவே, பேரறி​வாளன் வழக்​கறிஞர் என்ற முறை​யில் எந்த நீதி​மன்​றங்​களி​லும் ஆஜராகி வாதிடக்​கூ​டாது என தடை விதித்​து, அவரது வழக்​கறிஞர் பதிவை​யும் ரத்து செய்ய வேண்​டும் என்று மனுவில் கோரி​யிருந்​தார்.

நீதிப​தி​கள் எஸ்​.சவுந்​தர், பி.பி.​பாலாஜி ஆகியோர் அடங்​கிய விடு​முறைக் கால அமர்​வில் இந்த வழக்கு நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, மனு​தா​ரர் தரப்​பில் வழக்​கறிஞர் சுதர்​ஷனா சுந்​தர் ஆஜராகி, ‘‘பேரறி​வாளனை உச்ச நீதி​மன்​றம் நிரப​ராதி எனக்​கூறி விடு​தலை செய்​ய​வில்​லை. மனி​தாபி​மான அடிப்​படை​யில்​தான் முன்​கூட்டி விடு​வித்​துள்​ளது. எனவே, வழக்​கறிஞர் சட்​டப்​படி அவர் தன்னை வழக்​கறிஞ​ராக பதிவு செய்​யும் தகு​தியை இழந்​து​விட்​டார்.

எனவே, இந்த வழக்கு நிலு​வை​யில் இருக்​கும் வரை அவரது வழக்​கறிஞர் பதிவை நிறுத்தி வைக்க வேண்​டும். அத்​துடன் அவரை வழக்​கறிஞ​ராக பதிவு செய்​திருப்​பது சட்​ட​விரோதம் என்​றும் அறிவிக்க வேண்​டும்’’ என்று வாதிட்​டார்.

இதையடுத்து நீதிப​தி​கள், இது தொடர்​பாக அகில இந்​திய பார் கவுன்​சில், தமிழ்​நாடு, புதுச்​சேரி பார் கவுன்​சில் மற்​றும் பேரறி​வாளன் உள்​ளிட்​டோர்​ 4 வார காலத்​துக்​குள்​ பதில்​ அளிக்​க உத்​தர​விட்​டு வி​சா​ரணையை தள்​ளிவைத்​தனர்​.

பேரறிவாளனின் வழக்கறிஞர் பதிவு சட்ட விரோதம் என அறிவிக்கக் கோரி வழக்கு
மதச்சார்பற்ற கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க விஜய் விருப்பம்: துரை ரவிக்குமார் எம்.பி. தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in