வனக் குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

வனக் குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு
Updated on
1 min read

மதுரை: தமிழகத்​தில் தொடர்ந்து வனக் குற்​றங்​களில் ஈடு​படு​வோரை குண்​டர் சட்​டத்​தில் கைது செய்​யக்​கோரிய வழக்​கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

மதுரையைச் சேர்ந்த மணி​பார​தி, உயர் நீதி​மன்ற அமர்​வில் தாக்​கல் செய்த மனு: தென் மாவட்​டங்​களில் மரங்​களை வெட்​டு​தல், வனவிலங்​கு​களை வேட்​டை​யாடு​தல், கடத்​தல், யானை வழித்​தடங்​களை அழித்​தல், காட்​டுத்​தீயை ஏற்​படுத்​து​வோர் போன்ற குற்​றங்​கள் தொடர்ந்து நடை​பெற்று வரு​கிறது. இந்த தவறுகளை பலர் மீண்​டும் மீண்​டும் செய்​கின்​றனர். இருப்​பினும் அவர்​களை வனக் குற்​ற​வாளி​களாக கருதி குண்​டர் சட்​டத்​தில் கைது செய்​யப்​படு​வ​தில்​லை.

தமிழகத்​தில் 2009 முதல் 2019 வரை வனக் குற்​ற​வாளி​கள் பிரி​வில் 26 பேர் மட்​டுமே குண்​டர் சட்​டத்​தில் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். வனத்​துறை​யில் வனப்​பாது​காவலர், வனச்​சரக அலு​வலர் உள்​ளிட்ட பல பணி​யிடங்​கள் காலி​யாக இருப்​ப​தால் குற்​றங்​களை தடுப்​ப​தற்​கும், விசா​ரிப்​ப​தி​லும் தொய்வு ஏற்​பட்​டுள்​ளது. எனவே, தமிழகத்​தில் வனக் குற்​றங்​களை தடுக்​க​வும், வனவிலங்​கு​களை பாது​காக்​க​வும் வனக் குற்​ற​வாளி​களை குண்​டர் சட்​டத்​தில் கைது செய்ய உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனுவை நீதிப​தி​கள் சதீஷ்கு​மார், ஜோதி​ராமன் அமர்வு விசா​ரித்​து, மனு தொடர்​பாக உள்​துறை, வனத்​துறை முதன்மை செயலர்​கள், தலைமை வனப் பாது​காவலர் ஆகியோர் அறிக்கை தாக்​கல் செய்ய உத்​தர​விட்​டு வி​சா​ரணை​யை தள்​ளிவைத்​தனர்​.

வனக் குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு
“வெள்ளை அறிக்கையை காரணம் காட்டி தவெக அரசு செயல்படாமல் இருக்கக் கூடாது” - அண்ணாமலை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in