தே.ஜ. கூட்டணிக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆதரவு

தே.ஜ. கூட்டணிக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆதரவு
Updated on
1 min read

தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு நிபந்​தனையற்ற ஆதர​வுடன் தமி​ழ​கம் முழு​வதும் ஆதரவு திரட்ட பெருந்​தலை​வர் மக்​கள் கட்சி முடிவு செய்​திருப்​ப​தாக அக்​கட்​சித் தலை​வர் என்​.ஆர்​.தன​பாலன் தெரி​வித்​துள்​ளார்.

இது குறித்​து, அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: அடுத்த மாதம் நடை​பெற உள்ள தமிழக சட்​டமன்ற பொதுத்​தேர்​தலில் கே.பழனி​சாமி தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு நிபந்​தனையற்ற ஆதர​வுடன் தமி​ழ​கம் முழு​வதும் பிரச்​சா​ரம் செய்து ஆதரவு திரட்​டு​வது என்று பெருந்​தலை​வர் மக்​கள் கட்சி மற்​றும் தமிழக நாடார் பேரவை முடிவு செய்​துள்​ளது.

தமி​ழ​கத்​தில் நாடார் சமு​தாய மக்​கள் அனைத்து மாவட்​டங்​களி​லும் பரவலாக​வும், தென் மாவட்​டங்​களில் அடர்த்​தி​யாக​வும் வாழ்ந்து வரு​கின்​ற​னர். ஒவ்​வொரு தொகு​தி​யிலும் அரசி​யல் கட்​சி​களின் வெற்றி தோல்​வியை நிர்​ண​யம் செய்​யக்​கூடிய இடத்​தில் நாடார் சமு​தாய மக்​கள் இருக்​கின்​ற​னர்.

அவர்​களை ஒன்​றிணைத்து பழனி​சாமி தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு வெற்​றி​வாகை சூடும் வகை​யில் தமி​ழ​கம் முழு​வதும் அனைத்து மாவட்​டங்​களி​லும் சுற்​றுப்​பயணம் செய்​து, நாடார் சமு​தாய மக்​களை ஓரணி​யில் திரட்​டி, தேசிய ஜனநாயக கூட்​டணி வெற்​றிக்கு பாடு​படு​வோம். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

தே.ஜ. கூட்டணிக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆதரவு
புதுச்சேரியில் 4 தொகுதிகளில் விசிக தனித்துப் போட்டி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in