டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்க; மேல்முறையீடு செய்தால் போராட்டம் நடத்துவோம்: சிஐடியு

சிஐடியு விருதுநகர் மாவட்ட செயலாளர் தேவா

சிஐடியு விருதுநகர் மாவட்ட செயலாளர் தேவா

Updated on: 
1 min read

விருதுநகர்: தமிழகத்தில் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். அரசு மேல்முறையீடு செய்தால் ஊழியர்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று சிஐடியு மாவட்டச் செயலாளர் தேவா தெரிவித்தார்.

இது குறித்து விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டு முதல் டாஸ்மாக் கடைகளை அரசை ஏற்று நடத்தி வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் 700 ஊழியர்கள் உட்பட தமிழகம் முழுவதும் சுமார் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களை 1981 தொழிலாளர் சட்டப்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சிஐடியு தொடர்ந்த வழக்கில் தொழிலாளர் துறை ஆணையர் உத்தரவிட்டார். பின்னர் இந்த உத்தரவை மதுரை உயர் நீதிமன்றமும் உறுதிப்படுத்தியது.

இதனிடையே தமிழகத்தில் பணியாற்றி வரும் டாஸ்மாக் ஊழியர்கள் அனைவரையும் அரசு உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதை கைவிட வேண்டும். இல்லையெனில் தொழிலாளர்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்” என்று தேவா தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>சிஐடியு விருதுநகர் மாவட்ட செயலாளர் தேவா</p></div>
ஶ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்தில் 2-வது நாளாக எரியும் காட்டுத்தீ: வனத்துறை விசாரணை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in