நூலகம் மற்றும் அறிவியல் கட்டமைப்புகளால் காண்போரை வியக்க வைக்கும் கோவை ‘பெரியார் அறிவுலகம்’

நூலகம் மற்றும் அறிவியல் கட்டமைப்புகளால் காண்போரை வியக்க வைக்கும் கோவை ‘பெரியார் அறிவுலகம்’
Updated on: 
1 min read

கோவை: கோவை காந்திபுரத்தில் ரூ.301 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ‘பெரியார் அறிவுலகம்’ என்ற நூலகம் மற்றும் அறிவியல் மையத்தை முதல்வர் விஜய் இன்று (அக்.16) திறந்து வைத்தார்.

தரைத்தளம் மற்றும் 7 தளங்களுடன் கூடிய பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இம்மைய வளாகம் ஏ மற்றும் பி என இரு பிளாக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளன. தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகம், 350 பேர் அமரக்கூடிய ஆடிட்டோரியம், அறிவியல் உபகரணங்களுடன் கூடிய அறிவியல் மையம், விண்வெளியை கண்டுகளிக்கும் வகையில் கோளரங்கம், ஃஸ்பேஸ் லிப்ட் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

முதல் தளத்தில் வரவேற்பறை, அறிவியல் மையம், மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகமும், 2-வது தளத்தில் சொந்தமாக புத்தகம் எடுத்து வருபவர்கள் படிக்க குறிப்பிட்ட இடமும், சிறுவர்களுக்கான நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. 3-ம் தளத்தில் போட்டித் தேர்வு பயிற்சி மையம், நிர்வாகப் பிரிவு, நூலகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.

4-ம் தளத்தில் வரலாற்று புத்தகங்கள் பிரிவு, தமிழ் நூல்கள் பிரிவு, பருவ இதழ்கள், 5-வது தளத்தில் ஆங்கில நூல்கள் பிரிவு, ஸ்டாப்-அப் நிறுவனங்களுக்கான இன்குபேஷன் சென்டர், 6-வது தளத்தில் ஆங்கிலம் கற்கும் பிரிவு, இன்குபேஷன் சென்டர், 7-வது தளத்தில் அறிவியல் மையம் மற்றும் டிஜிட்டல் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நூலகம் மற்றும் அறிவியல் கட்டமைப்புகளால் காண்போரை வியக்க வைக்கும் கோவை ‘பெரியார் அறிவுலகம்’
“மதம் மாறியோரின் இடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாக்க வேண்டும்” - மு.வீரபாண்டியன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in