விஜய் வருகையால் விவிஐபி தொகுதியான பெரம்பூர் - நிலவரம் என்ன?

பூர்​வீக சென்னை என்​றழைக்​கப்​படும் வட சென்​னை​யில் பெரம்பூர் தொகுதி இடம்​பெற்​றுள்​ளது. மக்​கள் நெருக்​கம் மிகுந்த பகு​தி​யாக இத்​தொகுதி உள்​ளது. மேலும், கால்​பந்​தாட்ட வீரர்​கள், குத்​துச்​சண்டை வீரர்​கள், கானா பாடகர்​கள் நிறைந்த பகு​தி​யாக​வும் உள்ளது. இத்​தொகு​தி​யில் வியாசர்​பாடி, கொடுங்​கையூர், எருக்கஞ்சேரி ஆகிய முக்​கிய வரு​வாய் கிராமங்​கள் உள்​ளன.

இத்​தொகு​தி​யில் முஸ்​லிம்​கள், கிறிஸ்​தவர்​கள், வடமாநிலத்​தவர் எண்​ணிக்கை கணிச​மாக உள்​ளது. அதி​லும் கிறிஸ்​தவர்​கள் கொஞ்சம் அதி​க​மாகவே உள்​ளனர். பூர்​வீக​மாக தலித்​துகள் அதிகளவில் வசிக்​கின்​றனர். அந்த வகை​யில் மொத்த வாக்காளர்களில் சுமார் 30 சதவீதம் தலித்​துகள் உள்​ளனர். எனவே, இத்​தொகு​தி​யின் வெற்​றியை தீர்​மானிக்​கும் சக்​தி​யாக தலித்​துகள் உள்​ளனர்.

தொகு​தி​யில் நில​வும் பிரச்​சினை​கள்

மாநகரில் தின​மும் சேகர​மாகும் சுமார் 3 ஆயிரம் டன் குப்​பை, இத்​தொகு​தி​யில் 333 ஏக்​கர் பரப்​பளவி​லான கொடுங்​கையூர் குப்பை கொட்​டும் வளாகத்​தில் தான் கொட்​டப்​படு​கிறது.

கொடுங்​கையூர் கால்​வாய், கேப்​டன் காட்​டன் கால்​வாய், வியாசர்​பாடி கால்​வாய் ஆகிய​வற்​றில் 365 நாட்​களும் சாக்​கடை நீர் ஓடுவதை தடுக்​காத​தால், கொசு உற்​பத்தி கேந்​திர​மாக மாறி​யுள்​ளது.

கொடுங்​கையூர் குப்பை கிடங்​கால் ஏற்​பட்ட நிலத்​தடி நீர் பாதிப்​பு, மணலி​யில் உள்ள தொழிற்​சாலைகள் வெளி​யிடும் புகை​யால் பாதிப்பு உள்​ளதா என அறி​வியல் பூர்​வ​மாக ஆய்வு செய்​யாதது, குப்பை கிடங்​கில் ஏற்​படும் தீயால் உரு​வாகும் புகை மாசு போன்றவை இப்​பகு​தி​யின் பெரும் பிரச்​சினை​களாக உள்​ளன.

இது​வரை 16 சட்​டப்​பேரவை பொதுத்​தேர்​தல்​கள், ஒரு இடைத்​தேர்தலை இத்​தொகுதி சந்​தித்​துள்​ளது. இதில் 9 முறை திமுக, 3 முறை மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட், தலா 2 முறை அதி​முக, சுயேச்சைகள், ஒரு முறை காங்​கிரஸ் வென்​றிருப்​ப​தால், இத்​தொகுதி பெரும்​பாலான காலங்​களில் திமுக​வின் கோட்டையாகவே இருந்​துள்​ளது.

வேட்​பாளர்​கள் பின்​புலம்

கடந்த 2001, 2006, 2011 சட்​டப்​பேர​வைத் தேர்​தல்​களில் பெரம்​பூரில் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் வெற்றி பெற்​றது. அக்​கட்சி இடம்​பெற்ற கூட்​ட​ணியே ஆட்​சி​யிலும் இருந்​தது. 2016-ல் அதி​முக வேட்​பாளர் பி.வெற்​றிவேல் வெற்றி பெற்​றார்.

அதி​முக​வும் 2-வது முறை ஆட்​சி​யைக் கைப்​பற்​றியது. ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பிறது, அதி​முக உடைந்​த​போது, அவர் அமமுக​வுக்கு சென்​ற​தால் தகுதி நீக்​கம் செய்​யப்​பட்​டார். பின்​னர் நடை​பெற்ற இடைத்​தேர்​தலில் திமுக​வின் ஆர்​.டி.சேகர் தொகுதியை வசமாக்​கி​னார்.

இருப்​பினும் எதிர்க்​கட்​சி​யாக இருந்​த​தால் தொகு​திக்கு அவரால் எந்த திட்​டத்​தை​யும் கொண்​டுவர முடிய​வில்லை. தொடர்ந்​து, 2021 தேர்​தலில் 2-வது முறை​யாக ஆர்​.டி.சேகர் வெற்றி பெற்று ஆளுங்​கட்சி எம்​எல்​ஏ​வான பின்​னர் பூங்​காக்​கள், உடற்​ப​யிற்சி கூடங்​கள் சீரமைப்​பு, விளை​யாட்டு திடல்​கள் மேம்பாடு, குத்​துச்​சண்டை அரங்கம், கொடுங்​கையூர் குப்பை கொட்​டும் வளாகத்​தில் பழைய குப்​பைகளை அகற்​றி, இடத்தை மீட்​டெடுக்​கும் பணி​கள், முதல்​வர் படைப்​பகம் என பல்​வேறு திட்​டங்​களைக் கொண்டு வந்​தது மக்​கள் மனதில் இடம்​பிடித்​துள்​ளார்.

இந்த தேர்​தலில் திமுக சார்​பில் மீண்​டும் ஆர்​.டி.சேகர் களம் காண்கிறார். தவெக தலை​வர் விஜய்​யும் இத்​தொகு​தி​யில் போட்டியிடு​வ​தால் இந்த தொகுதி விவிஐபி தொகு​தி​யாக மாறியுள்ளது. நாம் தமிழர் கட்சி சார்​பில் வெற்றி தமிழன் போட்டியிடு​கிறார்.

அதி​முக கூட்​ட​ணி​யில் பாமக சார்​பில் தில​க​பாமா போட்டியிடுகிறார். கடந்த 2016 தேர்​தலில் இத்​தொகு​தி​யில் பாமக தனித்து போட்​டி​யிட்​ட​போது, சுமார் 3,500 வாக்​கு​களே கிடைத்​தன. பாமகவைப் பொருத்​தவரை இத்​தொகு​தி​யில் பெரிய வாக்கு வங்கி இல்​லை.

அதி​முக மற்​றும் பாஜகவை நம்​பியே பாமக களத்​தில் இறங்கியுள்ளது. கூட்​ட​ணிக் கட்​சிகளின் வாக்​கு​களை எந்த அளவுக்கு பெறுகிறார் என்​ப​தைப் பொறுத்தே அவரின் வெற்​றி​வாய்ப்பு இருக்​கும் என கூறப்​படு​கிறது.

இத்​தொகு​தி​யில் திமுக வேட்​பாளர் ஆர்​.டி.சேகர், கடந்த தேர்​தலில் 54 ஆயிரம் வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் பெற்றி பெற்​றிருந்​தார். இந்தத் தேர்​தலில் திமுக​வின் தேர்​தல் அறிக்கை அவருக்கு கூடுதல் பலத்தை தந்​தா​லும், விஜய்​யின் வரு​கை, அவரின் நட்சத்திர வெளிச்​சம், புதிய வாக்​காளர்​களின் தாக்கம் ஆகிய​வற்றால் போட்டி கடுமை​யாக இருக்​கும் என்று கணிக்​கப்​படு​கிறது.

வேட்​பாளர்​கள் பின்​புலம்

ஆண் - 1,07,995

பெண் - 1,14,726

மூன்றாம் பாலினத்தவர் - 71

மொத்த வாக்காளர்கள் - 2,22,792

விஜய் வருகையால் விவிஐபி தொகுதியான பெரம்பூர் - நிலவரம் என்ன?
கே.என்.நேரு ‘ஹாட்ரிக்’ சாத்தியமா? - திருச்சி மேற்கு தொகுதி ரவுண்ட்-அப்

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in