புதிதாக அமைய உள்ள கடலூர் சிப்காட் தொழில் பூங்காவுக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு

விவசாயிகள், கிராம மக்கள் கருப்புக்கொடி பேரணி
புதிதாக அமைய உள்ள கடலூர் சிப்காட் தொழில் பூங்காவுக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு
Updated on: 
1 min read

கடலூர்: புதிதாக அமைய உள்ள கடலூர சிப்காட் தொழில் பூங்காவுக்கு, அப்பகுதியில் உள்ள சுற்று வட்டார கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடலூர் - சிதம்பரம் சாலையில் அமைந்துள்ள, கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்துக்காக கடந்த திமுக ஆட்சியில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. இதற்காக கடலூர் அருகில் உள்ள தியாகவல்லி, நொச்சிக்காடு, குடிகாடு உள்

ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் உள்ள சுமார் 450 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியை அப்போதைய அரசு மேற்கொண்டது.

பொதுமக்கள், விவசாயிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் ‘சிப்காட் விரிவாக்கம்’ என்பதை ‘கடலூர் சிப்காட் தொழில்பூங்கா’ என மாற்றம் செய்து, விவசாய நிலங்களை கையகபடுத்தும் முயற்சியில் தவெக அரசு இறங்கியுள்ளது. இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி, நேற்று தியாகவல்லி, குடிகாடு, நொச்சிக்காடு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தியாகவல்லியில் இருந்து நொச்சிக்காடு வரை 4 கி.மீ தொலைவுக்கு கருப்புக்கொடி பேரணி நடத்தினர்.

பேரணியில் கிராம மக்கள், பள்ளி மாணவர்கள், முதியோர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, சிப்காட் தொழில் பூங்காவுக்கு எதிரான பதாகைகளை கையில் ஏந்தியவாறு விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றனர்.

புதிதாக அமைய உள்ள கடலூர் சிப்காட் தொழில் பூங்காவுக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு
அரசுப் பேருந்தில் திமுக குறித்த சர்ச்சை வாசகங்கள்: வைரல் வீடியோவுக்கு அதிகாரிகள் விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in