அரசுப் பேருந்தில் திமுக குறித்த சர்ச்சை வாசகங்கள்: வைரல் வீடியோவுக்கு அதிகாரிகள் விளக்கம்

புதுச்சேரியிலிருந்து திருச்சி வரை இயங்கும் தமிழ்நாடு அரசுப் பேருந்தின் டிஜிட்டல் பலகையில், திமுகவை விமர்சிக்கும் வாசகங்கள் இடம்பெற்றிருந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியிலிருந்து திருச்சி வரை இயங்கும் தமிழ்நாடு அரசுப் பேருந்தின் டிஜிட்டல் பலகையில், திமுகவை விமர்சிக்கும் வாசகங்கள் இடம்பெற்றிருந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Updated on: 
1 min read

கடலூர்: அரசுப் பேருந்தில் திமுக குறித்த சர்ச்சைக்குரிய வசனங்கள் டிஜிட்டல் பலகையில் ஒளிபரப்பிய வைரல் வீடியோவுக்கு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

திருச்சியில் இருந்து புதுச்சேரி செல்லும் அரசுப் பேருந்தில் ‘ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீய சக்தி’, ‘கொளத்தூர் கொத்து பரோட்டோ’, ஸ்டாலின் அங்கிள்...’ உள்ளிட்ட வாசகங்கள் ஒளிபரப்பாகும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

விழுப்புரம் கோட்டத்தைச் சேர்ந்த புதுச்சேரியில் இருந்து கடலூர், நெய்வேலி, விருத்தாசலம், பெரம்பலூர், திருச்சி வரை செல்லும் 241 என்ற எண் கொண்ட அரசுப் பேருந்தில் ஊர்களின் பெயர் ஒளிரும் டிஜிட்டல் பலகையில் திமுகவையும், திமுக தலைவர்களையும் விமர்சிக்கும் வகையிலான வாசகங்கள் ஒளிர்ந்தது.

இதையறிந்த பயணிகள் சிலர், ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் தெரிவித்த நிலையில், அதை சரிசெய்துள்ளனர். ஆனாலும், டிஜிட்டல் பலகையில் வாசகங்கள் ஒளிர்ந்ததை பேருந்தின் பின்னால் சென்ற ஒரு நபர் படம்பிடித்து, அதை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார். இந்த விவகாரம் தற்போது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கடலூர் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில், “அந்தப் பேருந்து விருத்தாசலம் பணிமனையைச் சேர்ந்தது. நேற்று இரவு சமூக வலைதளங்களில் பரவியதும், நாங்கள் அந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தோம். ஆனால், அப்போது அவ்வாறு எவ்வித வாசகங்களும் ஒளிபரப்பாகவில்லை.

டிஜிட்டல் பலகை ஒப்பந்ததாரரிடம் கேட்டபோது, மதர்போர்டில் பிரச்சினை உள்ளதாக தெரிவித்தார். மதர்போர்டின் வயர் வெளியே தொங்கிக் கொண்டிருந்த நிலையில், இதன்மூலம் வெளியாட்கள் யாரேனும் இந்த வாசகங்களை உள்ளீடு செய்தார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” என அதிகாரிகள் தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>புதுச்சேரியிலிருந்து திருச்சி வரை இயங்கும் தமிழ்நாடு அரசுப் பேருந்தின் டிஜிட்டல் பலகையில், திமுகவை விமர்சிக்கும் வாசகங்கள் இடம்பெற்றிருந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p></div>
ஆர்எஸ்எஸ் ஊர்வலம் காஷ்மீரில் அனுமதிக்கப்படும் போது தமிழகத்தில் மறுப்பு ஏன்? - ஐகோர்ட்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in