காரைக்குடி அருகே ஈக்களால் ஒரு கிராமமே பாதிப்பு: தேர்தல் புறக்கணிப்பு பேனர் வைத்த மக்கள்

குளத்துவேல்பட்டியில் தேர்தலை புறக்கணிக்க போவதாக பேனர் வைத்த மக்கள்.

குளத்துவேல்பட்டியில் தேர்தலை புறக்கணிக்க போவதாக பேனர் வைத்த மக்கள்.

Updated on
1 min read

காரைக்குடி: காரைக்குடி அருகே ஈக்களால் ஒரு கிராமமே பாதிக்கப்பட்ட தால், தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அப்பகுதி மக்கள் பேனர் வைத்து எதிர்ப்பு தெரி வித்தனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சிறுகப்பட்டி ஊராட்சி குளத்துவேல்பட்டியில் 70 குடும்பங்கள் வசிக்கின்றன. இக்கிராமம் அருகே 2 மாதங்க ளுக்கு முன்பு தனியார் கோழிப் பண்ணை அமைக்கப்பட்டது.

இந்தப் பண்ணையிலிருந்து ஏராளமான ஈக்கள் ஊருக்குள் பறந்து வருகின்றன. மேலும், அப்பகுதி முழுவதும் துர் நாற்றமும் வீசுகிறது. இதனால், அந்த கிராமமே கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது.

இதையடுத்து, சுகாதாரமற்ற முறையில் இயங்கும் அந்த கோழிப் பண்ணையை அகற்ற வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் தொடர்ந்து ஊரக வளர்ச்சி, வருவாய்த்துறை அதிகாரி களிடம் மனு அளித்தனர். ஆனால், நடவடிக்கை எடுக்க வில்லை.

<div class="paragraphs"><p>தனியார் கோழிப் பண்ணையால் மொய்க்கும் ஈக்கள்.</p></div>

தனியார் கோழிப் பண்ணையால் மொய்க்கும் ஈக்கள்.

இதனால் அதிருப்தி அடைந்த கிராம மக்கள், வரும் சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கிராமத்தில் பேனர் வைத்து ள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: கோழிப் பண்ணையிலிருந்து அதி களவில் ஈக்கள் வருகின்றன.

அவை உணவுப் பொருட்களில் மொய்க்கின்றன. இதனால், நோய் பரவும் அபாயம் உள் ளது. துர்நாற்றம் கடுமையாக வீசுவதால், சுவாசிக்க முடிய வில்லை. பண்ணையை அகற்ற பலமுறை மனு அளித்தும் நட வடிக்கை எடுக்கவில்லை. எனவே, தேர்தலை புறக்கணிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

<div class="paragraphs"><p>குளத்துவேல்பட்டியில் தேர்தலை புறக்கணிக்க போவதாக பேனர் வைத்த மக்கள்.</p></div>
தமிழகத்தில் ‘துரந்தர் 2’ திரையிடுவதை நிறுத்தக் கோரி ஐகோர்ட்டில் அவசர முறையீடு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in