

மகேஷ்குமார் அகர்வால்
சென்னை: சட்டம் - ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிய தமிழகம் முழு வதும் ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது: காவல் நிலைய அதிகாரி முதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வரை, அனைத்து அதிகாரிகளும் தங்களது எல்கைக்குட்பட்ட பகுதிகளில் காவலர்களுடன் இணைந்து காவல் நடை ரோந்துப் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
இந்நடவடிக்கையின் முக்கிய நோக்கம் பொதுமக்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு அவர்களது குறைகள் மற்றும் பிரச்சினைகளை அறிதல், நிலவும் சூழ்நிலையை ஆய்வு செய்தல், சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிதல், சமூகவிரோதிகள் மற்றும் குற்றவாளிகளை கண்காணித்து எச்சரித்தல் மற்றும் காவல்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை உயர்த்துதல் ஆகியவை ஆகும்.
இந்த உத்தரவின்படி, மாநிலம் முழுவதும் விரிவான காவல் நடை ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஜூன் 3-ம் தேதி 34 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், 28 கூடுதல் கண்காணிப்பாளர்கள், 146 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 499 காவல் ஆய்வாளர்கள் இந்த காவல் நடை ரோந்துப் பணிகளில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, -4ம் தேதி மாநிலம் முழுவதும் காவல் நடை ரோந்துபணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டது. இதில் 56 காவல் கண்காணிப்பாளர்கள், 39 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 215 துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 866 காவல் ஆய்வாளர்களும், 5-ம் தேதி 45 காவல் கண்காணிப்பாளர்கள், 32 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 203 துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 909 காவல் ஆய்வாளர்களும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த காவல் நடை ரோந்துப் பணிகளின் மூலம், மூத்த காவல் அதிகாரிகள், குற்றம் நடைபெறும் பகுதிகளில் நேரடியாககள ஆய்வுசெய்து, பொதுமக் களுடன் கலந்துரையாடி, அவர்களிடமிருந்து கருத்துகள் மற்றும் பின்னூட்டங்களைப் பெற்று, அவர்களின் குறைகள் மற்றும் தேவைகளை அறிந்து, தேவையான இடங்களில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
மேலும், உள்ளூர் சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு, சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான சவால்களை முன்கூட்டியே கண்டறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் இந்த முயற்சி உதவியது. இந்த காவல் நடை ரோந்துப்பணிகளுக்கு பொதுமக்களிட மிருந்து நல்ல வரவேற்பும்,
பாராட்டும் கிடைத்துள்ளது. இதன்மூலம் காவல் களப்பணியை மேலும் வலுப்படுத்தி, பொதுமக்களுடனான தொடர்பை மேம்படுத்தி, அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பான மற்றும் அமைதியான சூழலை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.