கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் 42 நாட்களுக்குப் பிறகு மின்சார ரயில்​ இயக்கம் சீரானதால் பயணிகள் மகிழ்ச்சி

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் 10, 11-வது நடைமேடையில் வழக்கம்போல வந்து செல்லும் புறநகர் மின்சார ரயில்கள். | படம்: எல்.சீனிவாசன் |

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் 10, 11-வது நடைமேடையில் வழக்கம்போல வந்து செல்லும் புறநகர் மின்சார ரயில்கள். | படம்: எல்.சீனிவாசன் |

Updated on
1 min read

சென்னை: கடற்​கரை - தாம்​பரம் - செங்​கல்​பட்டு வழித்​தடத்​தில் 42 நாட்​களுக்​குப் பிறகு வழக்​க​மான அட்​ட​வணைப்​படி ரயில்​கள் இயக்​கப்​பட்​டது. ரயில்​கள் இயக்​கம் சீரான​தால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்​துள்​ளனர்.

சென்னை எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில் ரூ.734.91 கோடி​யில் மறுசீரமைப்பு பணி நடந்து வரு​கிறது. இதன் ஒரு பகு​தி​யாக, பிரம்​மாண்ட நடை மேம்​பாலம் அமைக்​கும் பணி​கள் நடை​பெறுகின்​றன.

இந்த ரயில் நிலை​யத்​தின் 10, 11-வது நடைமேடைகளில் இதற்​கான பணி​கள் தொடங்​கிய​தால், கடற்​கரை - தாம்​பரம் - செங்​கல்​பட்டு தடத்​தில் கடந்த பிப்​.19-ம் தேதி முதல் 44 மின்​சார ரயில்​களின் சேவை ரத்து செய்​யப்​பட்​டது.

அதைத் தொடர்ந்து 45 ரயில் சேவை​கள் ரத்து செய்​யப்​பட்​டன. அதாவது, 204 ரயில் சேவை​களில் இருந்து 115 சேவை​களாக குறைக்​கப்​பட்​டன. மேலும், பராமரிப்பு பணி காரண​மாக எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில் புறநகர் ரயில்​கள் 10, 11-வது நடைமேடைகளுக்கு பதிலாக 5, 6-வது நடைமேடைகளில் இயக்​கப்​பட்​டன.

இதனால், இரு மார்க்​கங்​களி​லும் எழும்​பூரை நோக்​கிச் செல்​லும்​போது, அதாவது, சேத்​துப்​பட்​டு, பூங்கா ரயில் நிலை​யப் பகு​தி​யில் ரயில்​கள் நீண்ட நேரம் காத்​திருக்​கும் நிலை ஏற்​பட்​டது. வழக்​க​மாக 2 அல்​லது 3 நிமிடங்​களில் செல்ல வேண்​டிய ரயில் 5 முதல் 15 நிமிடங்​கள் வரை தாமத​மானது.

பள்​ளி, கல்​லூரி​கள், அலு​வல​கங்​களுக்​குச் செல்​பவர்​களும், வெளியூர் விரைவு ரயில்​களைப் பிடிப்​ப​தற்​காக எழும்​பூர் வருபவர்​களும் இதனால் மிக​வும் அவதி​யடைந்​தனர்.

இந்​நிலை​யில், எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில் 10, 11-வது நடைமேடை​யில் நடைமேம்​பாலம் அமைக்​கும் பணி​கள் முடிந்​ததை அடுத்து 42 நாட்​களுக்​குப் பிறகு, நேற்று முதல் வழக்​க​மான அட்​ட​வணைப்​படி ரயில்​கள் இயக்​கப்​பட்​டன. ரயில்​கள் இயக்​கம் சீரான​தால் பயணி​கள் நிம்​மதி அடைந்​துள்​ளனர்.

நேற்று இந்த வழித்​தடத்​தில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இயக்​கப்​படும் ரயில்​கள் மற்​றும் ஒரு சில ரயில்​கள் மட்​டுமே ரத்து செய்​யப்​பட்​டு, சில ரயில்​கள் நேரம் மாற்​றம் செய்​யப்​பட்டு இயக்​கப்​பட்​டது.

இன்று முதல் 7-ம் தேதி வரை​யில், இரவு 11 மணி முதல் அதி​காலை 5 மணி இடையே இயக்​கப்​படும்​ ரயில்​கள்​ நேரம்​ ​மாற்​றம்​ செய்​யப்​பட்​டுள்​ள​தாக தெற்​கு ரயில்​வே தெரிவித்​துள்​ளது.

<div class="paragraphs"><p>சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் 10, 11-வது நடைமேடையில் வழக்கம்போல வந்து செல்லும் புறநகர் மின்சார ரயில்கள். | படம்: <em>எல்.சீனிவாசன்</em> |</p></div>
சாத்தான்குளம் வழக்கில் 9 போலீஸாருக்கும் அதிகபட்ச தண்டனை: மத்திய அரசு மனுவில் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in