பெண்களுக்கான சமநீதி, பாதுகாப்பை உறுதிசெய்வோம்: கட்சித் தலைவர்கள் மகளிர் தின வாழ்த்து

பெண்களுக்கான சமநீதி, பாதுகாப்பை உறுதிசெய்வோம்: கட்சித் தலைவர்கள் மகளிர் தின வாழ்த்து
Updated on
1 min read

சென்னை: உலக மகளிர் தினம் இன்று கொண்​டாடப்​படு​கிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வெளியிட்ட வாழ்த்துச்செய்தி:

தமிழக காங்​கிரஸ் தலை​வர் கு.செல்​வப்​பெருந்​தகை: மகளிர் தங்​களது உரிமை​களை பெறு​வதோடு, பொருளா​தார ரீதி​யாக​வும் உயர்​வடைந்​து, அவர்​களது லட்​சி​யங்​கள் நிறைவேறு​வதன் மூலமே அவர்​களது வாழ்வு ஏற்றம்பெறும். மகளிருக்கு சமஉரிமை, சமவாய்ப்பு வழங்​கு​வதோடு, சட்​டத்​தில் வழங்​கப்​பட்​டுள்ள உரிமை​கள் அவர்​களுக்கு முழு​மை​யாக கிடைக்​கும் வகை​யில் நல்ல சூழல் உரு​வாக வேண்​டும். அதற்​கான முயற்​சிகளில் நாம் ஈடு​படு​வோம்.

பாமக நிறு​வனர் ராம​தாஸ்: மகளிர் தினத்​தில் பெண்​களுக்கு அரசு வழங்​கும் வாழ்த்​துகளோ அல்​லது சில விருதுகளோ அவர்​களின் வாழ்வை மேம்​படுத்​தாது. தமிழக பெண்​களுக்கு அரசு வழங்​கக்​கூடிய ஆகச்​சிறந்த பரிசு பூரண மது​விலக்கு மட்​டுமே. வாழ்க்​கையே போர்க்​களம், வாழ்ந்​து​தான் பார்க்​கணும்.

மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ: பெண்​களுக்கு இழைக்​கப்​படும் கொடுமை​கள், மது​வின் காரண​மாக நிகழும் கொலைகள், பாலியல் கொடுமை​கள் நாளும் வளர்ந்து கொண்டே இருக்​கின்​றன. நாடாளு​மன்​றம், சட்​டப்​பேர​வை​களில் மகளிருக்​கான 33 விழுக்​காடு பிர​தி​நி​தித்​து​வம் என்​பது இன்​னும் எட்டா கனி​யாகவே உள்​ளது. உலக மகளிர் தினத்​தில் பெண்​களுக்​கான சமநீ​தி​யும், சம உரிமை​யும் கிடைக்க உறுதி கொள்​வோம்.

பாமக தலை​வர் அன்​புமணி: வீட்​டை​யும், நாட்​டை​யும் தாங்கி காக்​கும் மகளிருக்​கு, உலக மகளிர் தின வாழ்த்​துகளை தெரி​வித்து கொள்​கிறேன். மகளிருக்கு அதி​கார​மும், உரிமை​யும் அளிப்​பது எந்த அளவுக்கு முக்​கியமோ, அதை விடமுக்​கி​யம் பாது​காப்​பு. பெண்​களுக்கு எதி​ரான குற்​றங்​கள் நடக்​காத மாநில​மாக தமிழகத்தை மாற்​றி​னால் தான் பெண்​களுக்கு எளி​தாக அதி​கார​மும், உரிமை​யும் கிடைக்​கும்.

தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த்: பெண்​கள் அனைத்து துறை​களி​லும் திறமை​யுடன் முன்​னேறி வரும் இக்​கால​கட்​டத்​தில், அரசி​யல் துறை​யிலும் அதிக அளவில் பங்​கேற்​பது மிக​வும் அவசி​யம். பெண்​களின் பங்கு குடும்​பத்​துக்கு மட்​டுமல்ல, நாட்​டுக்​கும் ஒரு மகத்​தான சேவை​யாக மாற வேண்​டும்.

மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்முகம்: பெண்​கள் விடு​தலை இல்​லாமல் சமூக விடு​தலை சாத்​தி​யமில்​லை. பெண்​களின் உரிமை​கள், சமத்​து​வம், சமூக நீதி, ஜனநாயகம் ஆகிய​வற்றை காக்​கும் போராட்​டங்​களை தீவிரப்​படுத்​து​வோம். பெண்​கள் மீதான பொருளா​தா​ரச் சுரண்​டலுக்​கும், சமூக ஒடுக்​கு​முறைக்​கும் எதி​ராக ஒன்​று​பட்ட மக்​கள் இயக்​கத்தை கட்​டி​யெழுப்ப உறுதி ஏற்​போம்.

தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன்: மகளிர் சுமரி​யாதை​யுடன், சுதந்​திர​மாக, பாது​காப்​பாக வாழ​வும், சமவாய்ப்பை பெறவும் அனை​வரும் துணை நிற்க வேண்​டும். மத்​திய, மாநில அரசுகள் மகளிரின் பாது​காப்​பான முன்​னேற்​றத்​துக்கு உதவிடும் வகை​யில் செயல்பட வேண்​டும்.

ஐஜேகே தலை​வர் ரவிபச்​ச​முத்​து: பெண்​கள் ஒரு குடும்​பத்​தின் அடித்​தளம் மட்​டுமல்ல; சமூக முன்​னேற்​றத்​தின் சக்​தி​யாக​வும், நாட்டு வளர்ச்​சி​யின் முது​கெலும்​பாக​வும் விளங்​குபவர்​கள். அனைத்து மகளிருக்​கும், மகளிர் தின வாழ்த்​து​கள். இவர்​களு​டன் கொங்​கு​நாடு மக்​கள்​ தேசி​ய கட்​சி பொதுச்​செய​லா​ளர்​ ஈ.ஆர்​.ஈஸ்​வரன்​ உள்​ளிட்​டோரும்​ வாழ்த்​து தெரிவித்​துள்​ளனர்​.

பெண்களுக்கான சமநீதி, பாதுகாப்பை உறுதிசெய்வோம்: கட்சித் தலைவர்கள் மகளிர் தின வாழ்த்து
“தன்னிறைவு பெற்றவர்களாக தமிழக மகளிரை உயர்த்துவோம்” - முதல்வர் ஸ்டாலின் உறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in