எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்த அரசியல் கட்சிகள்!

எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்த அரசியல் கட்சிகள்!
Updated on
1 min read

சென்னை: அதிமுகவுக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ்(தமிழ்நாடு), கொங்கு நாடு விவசாயிகள் கட்சி மற்றும் விஸ்வகர்மா புரட்சி கழகம் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.

இதுகுறித்து அதிமுக தரப்பில் வெளியான அறிக்கையில், ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (15.2.2026 ), கொங்குநாடு விவசாயிகள் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் கொங்கு ஆ. ராஜாமணி தலைமையில், அக்கட்சியின் நிர்வாகிகள் நேரில் சந்தித்து, நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அதிமுகவுக்கு தங்களது கட்சியின் முழு ஆதரவை தெரிவித்துக்கொண்டனர்.

அதற்கு, எடப்பாடி பழனிசாமி, தமது மனமார்ந்த நன்றியையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார். இந்நிகழ்வின்போது, கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம். ஆனந்தன் உடனிருந்தார்.

மேலும், எடப்பாடி பழனிசாமியை, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று விஸ்வகர்மா புரட்சி கழக மாநிலத் தலைவர் மனோ சோழவராயர் தலைமையில், அக்கட்சியின் நிர்வாகிகள் நேரில் சந்தித்து, நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தங்களது கட்சியின் முழு ஆதரவை தெரிவித்துக்கொண்டனர்.

மேலும், எடப்பாடி பழனிசாமியை சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (தமிழ் நாடு) மாநிலத் தலைவர் நரேஷ்குமார் தலைமையில், அக்கட்சியின் நிர்வாகிகள் நேரில் சந்தித்து, நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தங்களது கட்சியின் முழு ஆதரவை தெரிவித்துக்கொண்டனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்த அரசியல் கட்சிகள்!
'ஆட்சியில் பங்கும் அதிக தொகுதிகளும் வேண்டும்' - மதுரை காங். கூட்டத்தில் அதிரடி தீர்மானம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in