ராயபுரம் தொகுதியில் கடும் போட்டியில் களமாடும் கட்சிகள்

பிரச்சாரத்தின்போது வயதான பெண்மணி யின் கோரிக்கையை கேட்ட அதிமுக வேட்பாளர் டி.ஜெயக்குமார்.

பிரச்சாரத்தின்போது வயதான பெண்மணி யின் கோரிக்கையை கேட்ட அதிமுக வேட்பாளர் டி.ஜெயக்குமார்.

படங்கள்: ம.பிரபு

Updated on
2 min read

கடலோர பகுதியான ராயபுரம் தொகுதியில், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், பகுஜன் சமாஜ் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் மற்றும் 20 சுயேச்சைகள் உட்பட 28 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

​தி​முக - சுபேகர்​கான்

திமுக வேட்​பாள​ராக, மறைந்த முன்​னாள் அமைச்​சர் ரகு​மான்​கானின் மகன் சுபேர்​கான் போட்​டி​யிடு​கி​றார். மருத்​து​வ​ரான இவர், கடந்த 5 ஆண்​டு​களில் ராயபுரம் தொகு​தி​யில் திமுக அரசு செயல்​படுத்​திய பல்​வேறு திட்​டங்​களை​யும், திமுக​வின் தேர்​தல் வாக்​குறு​தி​களை​யும் முன்​னிலைப்​படுத்தி பிரச்​சா​ரம் செய்து வரு​கி​றார்.

ராயபுரம் தொகுதி விஜயராகவலு சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் டாக்டர் சுபேர்கான்.

ராயபுரம் தொகுதி விஜயராகவலு சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் டாக்டர் சுபேர்கான்.

மகளிர் உரிமைத் தொகை விடு​பட்​ட​வர்​களுக்கு கிடைக்க முயற்சி செய்​வேன் என்று உறு​தி​யளித்து வரு​கி​றார்.

அதி​முக - முன்​னாள் அமைச்​சர் டி.ஜெயக்​கு​மார்

இந்த தொகு​தி​யில் 4 முறை எம்​எல்​ஏவாக இருந்த முன்​னாள் அமைச்​சர் டி.ஜெயக்​கு​மார், தற்​போது 8-வது முறை​யாக போட்​டி​யிடு​கி​றார்.

மின்ட் பாலம் அருகே வீடுதோறும் சென்று மரக்கன்று வழங்கி வாக்கு சேகரித்த நாதக வேட்பாளர் பாபு மைலன்.

மின்ட் பாலம் அருகே வீடுதோறும் சென்று மரக்கன்று வழங்கி வாக்கு சேகரித்த நாதக வேட்பாளர் பாபு மைலன்.

தான் அமைச்​ச​ராக இருந்த கால​கட்​டத்​தில் தொகு​தி​யில் கொண்​டு​வந்த வீட்​டு​வசதி வாரிய குடி​யிருப்​பு​கள், மேம்​பாலங்​கள் உள்​ளிட்ட திட்​டங்​கள் மற்​றும் அதி​முக தேர்​தல் அறிக்​கையை விளக்கி வாக்கு சேகரித்து வரு​கி​றார்.

நாம் தமி​ழர் கட்சி - பாபு மைலன்

நாதக வேட்​பாள​ராகப் போட்​டி​யிடும் பொறி​யாளர் பாபு மைலன், தொகு​தி​யில் குடிநீர், சாலை வசதி உள்​ளிட்ட அடிப்​படை தேவை​களை நிறை​வேற்​று​வ​தாக வாக்​குறுதி அளித்து பிரச்​சா​ரம் செய்து வரு​கி​றார்.

மேலும், கட்​சி​யின் கொள்​கை​கள் அடங்​கிய துண்டு பிரசுரங்​களு​டன் மரக்​கன்​றுகள் கொடுத்து பிரச்​சா​ரம் செய்​தது வாக்​காளர்​களைக் கவர்ந்​துள்​ளது.

எம்.சி. சாலையில் தொண்டர்களுடன் சென்று வாக்கு சேகரித்த தவெக வேட்பாளர் விஜய் தாமு

எம்.சி. சாலையில் தொண்டர்களுடன் சென்று வாக்கு சேகரித்த தவெக வேட்பாளர் விஜய் தாமு

தமிழக வெற்​றிக்​கழ​கம் - விஜய் தாமு

தவெக வேட்​பாளர் விஜய் தாமு, தொகுதி முழு​வதும் விசில் அடித்​த​படி வாக்கு சேகரித்து வரு​கி​றார். நடிகர் விஜய்​யின் பிரபலமே இவரது பலம். இளைஞர்​கள் புடைசூழ பொது​மக்​களை சந்​தித்து வாக்கு சேகரித்து வரு​கி​றார்.

திமுக - அதி​முக​ சம பலத்​துடன் உள்ள இத்​தொகு​தி​யில், வெற்றி பெறப்​போகும் வேட்​பாளர் யார் என்​ப​தில் பலத்த போட்டி நிலவுகிறது.

பிரச்சாரத்தின்போது வயதான பெண்மணி யின் கோரிக்கையை கேட்ட அதிமுக வேட்பாளர் டி.ஜெயக்குமார்.

பணப் பட்டுவாடா செய்ய தயாரான அரசியல் கட்சிகள் - தடுக்குமா தேர்தல் ஆணையம்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in