அண்ணாநகர் தொகுதியில் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் கட்சிகள் போட்டாபோட்டி

அதிமுக வேட்பாளர் கோகுல இந்திராவை  ஆதரித்து பிரச்சாரம் செய்த பொதுச் செயலாளர் பழனிசாமி.

அதிமுக வேட்பாளர் கோகுல இந்திராவை ஆதரித்து பிரச்சாரம் செய்த பொதுச் செயலாளர் பழனிசாமி.

Updated on
2 min read

சென்னை: சென்னையின் விஐபி தொகுதியான அண்ணாநகரில் இம்முறையும் திமுகவை எதிர்த்து அதிமுக களம் காண்கிறது. திமுக சார்பில் நே.சிற்றரசு வேட்பாளராக முதன்முறையாக களம் காண்கிறார்.

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.கோகுல் இந்திரா தொடர்ந்து 4-வது முறையாக போட்டியிடுகிறார். தவெக சார்பில் பொறியாளரான வி.கே.ராம்குமாரும், நாதக சார்பில் வழக்கறிஞர் எஸ்.சங்கரும் போட்டியிடுகின்றனர்.

மேலும், தமிழ் தெலுங்கு தேச கட்சி சார்பில் ராஜகுமார் நாயுடு, நாம் இந்தியர் கட்சியின் என்.பி.ராஜா, தமிழக முன்னேற்ற காங்கிரஸ் தயாளன் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 24 பேர் அண்ணாநகர் தொகுதி யில் போட்டியிடுகின்றனர்.

திமுக - உங்களில் ஒருவனாக இருப்பேன்

திமுக வேட்பாளர் நே.சிற்றரசு, செல்லும் இடங்களில் எல்லாம் குழந்தைகளுக்கு பெயர் சூட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த ஐந்தாண்டு காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களை பொது மக்களிடம் பொறுமையாக எடுத்துக்கூறி வாக்கு சேகரித்து வருகிறார். ‘நான் வெற்றி பெற்றால் உங்களில் ஒருவனாக இருந்து குறைகளைத் தீர்ப்பேன்.

கூட்டணி கட்சி தொண்டர்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்டாளர் நே.சிற்றரசு.

கூட்டணி கட்சி தொண்டர்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்டாளர் நே.சிற்றரசு.

நெல்சன் மாணிக்கம் சாலையில் பறக்கும் மேம்பாலம் அமைக்க முயற்சிப்பேன்’ என்று உறுதி கூறியுள்ளார்.

அதிமுக - பெண்களுக்கு அரணாக இருப்பேன்

அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் எஸ். கோகுல இந்திரா, ‘‘உங்களின் சகோதரியாக, தொடர்ந்து உங்களுக்காக அண்ணாநகரிலேயே வசித்து குரல் கொடுத்து வருகிறேன்’’ என சென்டிமெண்டாகப் பேசி வாக்கு சேகரிக்கிறார்.

மேலும், ‘‘பெண்களுக்கு அரணாக இருப்பேன். அண்ணாநகர் டவர் பார்க்கை ஹை-டெக் பார்க்காக மாற்றுவேன். மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைப்புடன் அண்ணாநகர் பிரதான சாலைகளில் மேம்பாலங் கள் அமைப்பேன்’’ என பிரச்சாரம் செய்து வருகிறார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எஸ்.சங்கருக்கு வாக்கு சேகரித்த தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எஸ்.சங்கருக்கு வாக்கு சேகரித்த தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

நாதக - வேலைவாய்ப்பு, கல்வித்தரத்தை உயர்த்துவேன்

நாதக வேட்பாளரான உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.சங்கர், இந்த தொகுதியில் கடந்த முறையும் போட்டியிட்டார். ‘‘நான்வெற்றி பெற்றால் இலவச சட்ட உதவி செய்வேன். வேலைவாய்ப்பு, கல்வித்தரத்தை உயர்த்த முக்கியத்துவம் அளிப்போம்’’ என்று பிரச்சாரம் செய்து வருகிறார்.

தவெக - மக்கள் கொஞ்சம் மாற்றி யோசிக்க வலியுறுத்தல்

தவெக வேட்பாளரான பொறியாளர் வி.கே.ராம்குமார், வாகனத்தில் விஜய் பாடல்களை அலற விட்டபடி, வாக்காளர்களைச் சந்தித்து, ‘‘அண்ணே... இந்தமுறை கொஞ்சம் மாற்றி யோசியுங்கள். எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்’’ என்று பிரச்சாரம் செய்து வருகிறார்.

துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்த தவெக வேட்பாளர் வி.கே.ராம்குமார்.

துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்த தவெக வேட்பாளர் வி.கே.ராம்குமார்.

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் முதல்வர்பழனிசாமி, திமுக வேட்பாளருக்கு ஆதரவாக உதயநிதி ஸ்டாலின், நாதக வேட்பாளருக்கு ஆதரவாக சீமான் பிரச்சாரம் செய்துள்ளனர். இரவு - பகல் தொடர் பிரச்சாரத்தால் அண்ணாநகர் தொகுதி அலறுகிறது.

அதிமுக வேட்பாளர் கோகுல இந்திராவை  ஆதரித்து பிரச்சாரம் செய்த பொதுச் செயலாளர் பழனிசாமி.

மன்னார்குடி தொகுதி மக்களின் மனம் கவரப் போவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in