பணிநிரந்தரம் செய்யக்கோரி பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

பணி நிரந்தரம் கோரி சென்னை சிவானந்தா சாலையில், பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். | படம்: ம.பிரபு |

பணி நிரந்தரம் கோரி சென்னை சிவானந்தா சாலையில், பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். | படம்: ம.பிரபு |

Updated on
1 min read

சென்னை: பணிநிரந்​தரம் கோரி சென்​னை​யில் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் நேற்று உண்​ணா​விரதம் இருந்​தனர். அரசு நடுநிலைப் பள்​ளி​கள், உயர்​நிலைப் பள்​ளி​கள் மற்​றும் மேல்​நிலைப் பள்​ளி​களில் தையல், ஓவி​யம், இசை, உடற்​கல்வி உள்​ளிட்ட பாடப்​பிரிவு​களில் 12 ஆயிரம் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் பணி​யாற்றி வரு​கின்​றனர்.

வாரத்​தில் 3 நாட்​கள் பணி​யாற்றி வரும் அவர்​களுக்கு தொகுப்​பூ​தி​ய​மாக ரூ.12,500 வழங்​கப்​பட்டு வரு​கிறது. அவர்​கள் பணிநிரந்​தரம் கோரி கடந்த 14 ஆண்​டு​களாகப் போராடி வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், தமிழக சிறப்​பாசிரியர்​கள் சங்​கம் சார்​பில் பணி நிரந்​தரம் கோரி பகுதி நேர ஆசிரியர்கள் சென்னை சிவானந்தா சாலை​யில் நேற்று உண்​ணா​விரதப் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

அந்த அமைப்​பின் மாநிலத் தலை​வர் சே.​முரளி தலை​மை​யில் நடை​பெற்ற இப்​போ​ராட்​டத்​தில் மாநில பொதுச்​செய​லா​ளர் வெ.​ராமகேசவன், மாநில பொருளாளர் ஆர்​.ஆனந்​தகு​மார் உட்பட 500-க்​கும் மேற்​பட்​டோர் கலந்​து​கொண்​டனர்.

போராட்​டம் குறித்து மாநிலத் தலை​வர் முரளி செய்​தி​யாளர்​களிடம் கூறுகை​யில், ``குறைந்த ஊதி​யத்​தில் கடந்த 14 ஆண்டு கால​மாக பணி​யாற்றி வரு​கிறோம். ஆட்​சிக்கு வந்​தால் பகுதி நேர சிறப்​பாசிரியர்​கள் பணிநிரந்​தரம் செய்​யப்​படு​வர் என திமுக சார்​பில் தேர்​தல் வாக்​குறுதி அளிக்​கப்​பட்​டது.

ஆனால், ஆட்​சிக்கு வந்து நான்​கரை ஆண்​டு​கள் ஆகி​யும் இன்​னும் இந்த வாக்​குறுதி நிறைவேற்​றப்​பட​வில்​லை. எதிர்​காலம் தெரி​யாமல் மனச்​சோர்​வுடன் உள்​ளோம்.

அரசு எங்​கள் வாழ்​வா​தா​ரத்தை உறு​தி​ செய்​யும் வகை​யிலும் தேர்​தல் வாக்​குறு​தியை நிறைவேற்​றும் வகை​யிலும் எங்​களை பணிநிரந்​தரம் செய்ய வேண்​டும் என்று வேண்​டு​கோள் விடுக்​கிறோம்'' என்​றார். காலை 10 மணிக்கு தொடங்​கிய உண்​ணா​விரதப் போ​ராட்​டம் மாலை 5 மணிக்​கு முடிவடைந்​தது.

<div class="paragraphs"><p>பணி நிரந்தரம் கோரி சென்னை சிவானந்தா சாலையில், பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். | படம்: ம.பிரபு |</p></div>
வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் பாமக வழக்கறிஞர் பாலு உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in