வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் பாமக வழக்கறிஞர் பாலு உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் பாமக வழக்கறிஞர் பாலு உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு
Updated on
1 min read

அரியலூர்: ​பாமக வழக்கறிஞர் பாலு உட்பட 6 பேர் மீது வன்கொடுமை தடுப்​புச் சட்​டத்​தில் வழக்கு பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. அரியலூர் மாவட்​டம் தா.பழூர் கடை வீ​தி​யில் டிச.25-ம் தேதி பாமக ஒன்​றியக்​குழு கூட்​டம் நடை​பெற்​றது.

கூட்​டம் முடிந்து பாமக நிர்​வாகி​கள் கார்​களில் ஜெயங்​கொண்​டம் புறப்​பட்​டனர். அப்​போது, தா.பழூர் கடைவீ​தி​யில் கீழசிந்​தாமணி கிராமத்தை சேர்ந்த பிர​சாத் குமார்​(43) மற்​றும் அவரது உறவினர் மகேந்​திரன்​(40) ஆகியோர் பொருட்கள் வாங்க வந்த நிலை​யில், பிர​சாத் குமார் தனது இருசக்கர வாக​னத்​துடன் சாலை​யோரம் நின்​றிருந்​தார்.

அப்​போது, பாமகவை சேர்ந்​தவர்​கள் சாலையை விட்டு ஓரமாக நகர சொல்​லிய​தால், இரு தரப்​பினருக்​கும் வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது. அப்​போது, கீழசிந்​தாமணியை சேர்ந்த தேவேந்​திரன், பனையடியை சேர்ந்த கொளஞ்சி ஆகியோர் பிர​சாத் குமாரை சாதி பெயரைச் சொல்லி திட்​டிய​தாக​வும், பாமக வழக்​கறிஞர் கே.​பாலு, பாமக பொறுப்​பாளர் டிஎம்​டி.​திரு​மாவளவன், மாவட்​டச் செய​லா​ளர் தமிழ்​மறவன் மற்​றும் சிலர் சேர்ந்து பிர​சாத் குமாரை தாக்​கிய​தாக​வும் கூறப்​படு​கிறது.

மேலும், இதுகுறித்து கேட்ட மகேந்​திரனை​யும் தாக்​கியதுடன், இரு​வரை​யும் தா.பழூர் காவல் நிலை​யத்​தில் பாமக​வினர் ஒப்​படைத்து விட்டு சென்​றுள்​ளனர். இதையடுத்து இரு​வரும் ஜெயங்​கொண்​டம் அரசு மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சைக்​காக சேர்ந்​தனர். மேலும், தங்​களை தாக்​கிய நபர்​கள் மீது தா.பழூர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தனர்.

இதையடுத்​து, பாமகவை சேர்ந்த தேவேந்​திரன், கொளஞ்​சி, வழக்​கறிஞர் கே.​பாலு, டிஎம்டி திரு​மாவளவன், மாவட்​டச் செய​லா​ளர் தமிழ்​மறவன், சதீஷ்கு​மார் ஆகிய 6 பேர் மீதும் வன்கொடுமை தடுப்​புச் சட்​டத்​தின் கீழ் தா.பழூர் போலீ​ஸார் நேற்று முன்​தினம் இரவு வழக்கு பதிவு செய்​தனர். இதில், சதீஷ்கு​மாரை(31) கைது செய்து விசா​ரித்து வருகின்​றனர்.

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் பாமக வழக்கறிஞர் பாலு உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு
கரூர் ஹோட்டல் உரிமையாளரின் கார், வைர நகைகளை அபகரித்து மிரட்டல்: டிவி நடிகை மீது வழக்கு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in