பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதாக அறிவிப்பு: வளர்ச்சித் திட்டங்கள் என்னவாகும் என மக்கள் எதிர்பார்ப்பு

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏகானாபுரத்தில் பட்டாசு வெடித்து, அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போராட்டக் குழுவினர் மற்றும் பொதுமக்கள்.

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏகானாபுரத்தில் பட்டாசு வெடித்து, அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போராட்டக் குழுவினர் மற்றும் பொதுமக்கள்.

Updated on
1 min read

காஞ்​சிபுரம்​: ​காஞ்​சிபுரம் மாவட்​டம், பரந்தூர் மற்​றும் அதன் சுற்​று​வட்​டார கிரா​மங்​களை உள்​ளடக்கி புதிய பசுமை வழி விமான நிலை​யம் அமைக்​கும் திட்​டம் முழு​மை​யாகக் கைவிடப்​படு​வ​தாக சட்​டப்​பேர​வை​யில் நேற்று 110 விதி​யின் கீழ் முதல்​வர் அறி​வித்​தார்.

அதி​காரப்​பூர்வ அறி​விப்பு வெளி​யானதைத் தொடர்ந்து ஏகனாபுரம் கிராம மக்​கள், போராட்​டக் குழு​வினர் அம்​பேத்​கர் சிலைக்கு மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​தி, பட்​டாசு வெடித்து இனிப்​பு​களை வழங்கி உற்​சாக​மாகக் கொண்​டாடினர்.

மேலும் ஏகனாபுரம் பிர​தான சாலைக்கு முதல்​வரின் பெயரைச் சூட்ட கிராம சபை​யில் தீர்​மானம் நிறை​வேற்​றப்​பட்​டுள்​ள​தாக​வும், விரை​வில் முதல்​வர் விஜய்யை நேரில் சந்​தித்து அரசிடம் நன்றி தெரிவிக்​க​வுள்​ள​தாக​வும் போராட்​டக் குழு​வினர் தெரி​வித்​தனர்.

இந்​நிலை​யில், பரந்தூர் விமான நிலை​யத் திட்​டத்தை மைய​மாக வைத்து காஞ்​சிபுரம் மற்​றும் அதனைச் சுற்​றி​யுள்ள பகு​தி​களில் பல்​லா​யிரக்​கணக்​கான கோடி ரூபாய் மதிப்​பில் தொடங்​கப்​பட்ட பல்​வேறு கட்​டமைப்பு மற்​றும் இணைப்​புத் திட்​டங்​களின் நிலை என்ன என்ற கேள்வி மக்​களிடையே எழுந்​துள்​ளது.

விமான நிலை​யத்தை இணைக்​கும் வகை​யில் திட்​ட​மிடப்​பட்ட பூந்​தமல்லி - பரந்தூர் மெட்ரோ ரயில் நீட்​டிப்​புத் திட்​டம், சென்னை பெங்​களூரு விரைவுச் சாலை​யுடன் பரந்​தூரை இணைக்​கும் அணுகு சாலை​கள் மற்​றும் தென் மாவட்​டங்​களை எளி​தில் சென்​றடை​யும் நோக்​கில் நடை​பெற்று வரும் காஞ்​சிபுரம் - கூட்​டேரிப்​பட்டு 4 வழிச் சாலைப் பணி​கள் ஆகியவை இதில் குறிப்​பிடத்​தக்​கவை.

மேலும், காஞ்​சிபுரம் புறவழிச்​சாலை விரி​வாக்​கம், உத்​திர மேரூர் மற்​றும் வாலாஜா​பாத் வழித்​தடங்​களின் இணைப்​பு, தொழிற்​பூங்​காக்​கள் விரி​வாக்​கம் போன்​றவை திட்​ட​மிடப்​பட்​டிருந்​தன.

விமான நிலை​யத் திட்​டம் மாறி​னாலும், காஞ்​சிபுரம் மற்​றும் சென்னை புறநகர் பகு​தி​யின் ஒட்​டுமொத்த போக்​கு​வரத்து நெரிசலைக் குறைக்​க​வும், தொழில் வளர்​ச்சி தடைப​டா​மல் இருக்​க​வும் இந்த இணைப்​புச் சாலை​கள், 4 வழிச் சாலைப் பணி​கள் மற்​றும் மெட்ரோ திட்​டங்​களைத் தொடர்​ந்து செயல்​படுத்த வேண்​டும் என்று மக்​கள் வலி​யுறுத்​தினர்​.

<div class="paragraphs"><p>பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏகானாபுரத்தில் பட்டாசு வெடித்து, அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போராட்டக் குழுவினர் மற்றும் பொதுமக்கள்.</p></div>
மிலாடி நபி: நாளை மதுக்கடைகள் மூடல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in