மன்னார் வளைகுடா கடற்பகுதியில் கடல் சீற்றம்: பாம்பன் - குருசடை தீவு படகு சவாரி நிறுத்தம்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

ராமேசுவரம்: மன்னார் வளைகுடா கடற்பகுதியில் கடல் சீற்றத்தினால் பாம்பன்-குருசடை தீவு இடையேயான படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை கடற்பகுதியிலும் சூறை காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், அதிகப்பட்சமாக 65 கி.மீ வேகம் வரையிலும் வீசக்கூடும் என்றும், கடல் அலை 3.0 மீட்டர் வரையிலும் எழக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம், தங்களது மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் அனைத்தையும் பாதுகாப்பாக வைத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன் மண்டபம், உள்ளிட்ட மீன்பிடி துறைமுகங்களிலிருந்து கடலுக்குச் செல்ல அனுமதி டோக்கனும் கடந்த மூன்று நாட்காள நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடல் சிற்றத்தினால் வனத்துறையினரால் நடத்தப்படும் பாம்பன்-குருசடை இடையே படகு சவாரியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். வானிலை இயல்பு நிலைக்கு திரும்பியதும் படகு சவாரி மீண்டும் தொடங்கும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
“புதுச்சேரி அமைச்சர்களுக்கு ஓரிரு நாளில் இலாகா ஒதுக்கீடு”- எதிர்க்கட்சித் தலைவர் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in