கப்பல்கள் தடையின்றி செல்ல ரூ.10 கோடியில் பாம்பன் கடல் கால்வாயை தூர்வாரும் பணி தீவிரம்

பாம்பன் கடல் கால்வாயில் கப்பல்கள், விசைப்படகுகள் தடையின்றி செல்ல தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ள கப்பல்.

பாம்பன் கடல் கால்வாயில் கப்பல்கள், விசைப்படகுகள் தடையின்றி செல்ல தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ள கப்பல்.

Updated on
1 min read

ராமேசுவரம்: ​பாம்​பன் கடல் கால்​வா​யில் கப்​பல்​கள், விசைப்​படகு​கள் தடை​யின்றி செல்ல ரூ. 9.5 கோடி செல​வில் தூர்​வாரும் பணி​கள் தீவிர​மாக நடை​பெற்று வரு​கின்​றன.

நாட்​டின் மிகப் பழமை​யும், வரலாற்​றுச் சிறப்​பும் வாய்ந்த துறை​முகங்​களில் பாம்​பன் துறை​முக​மும் ஒன்​று. கி.பி. 1,480-ம் ஆண்​டில் ஏற்​பட்ட மிகப்​பெரிய புயல் காரண​மாக இயற்​கை​யாகவே மன்​னார் வளை​குடா மற்​றும் பாக் நீரிணை இடையே பாம்​பன் கால்​வாய் பெரி​தாக உரு​வானது.

பாம்​பனுக்கு அரு​கில் குந்​து​கால், குருசடைத் தீவு ஆகிய 2 கடல் எல்​லைகளுக்கு இடை​யில் உள்ள நீர்ப்​பரப்​பிலிருந்து தொடங்​கி, பாம்​பன் சாலை மற்​றும் ரயில் பாலங்​களை கடந்​து, சுமார் 2 கிமீ வரை பாம்​பன் கால்​வாய் வழித்​தடம் உள்​ளது. கால்​வா​யின் அகலம் 125 மீட்​ட​ராக​வும், ஆழம் அதி​கபட்​சம் 2.11 மீட்​டரும் உள்​ளது.

ஆங்​கிலேயர் ஆட்​சிக்​காலத்​தில் 1854-ம் ஆண்​டில் முதன்​முறை​யாக 4,400 அடி நீளத்​துக்கு பாம்​பன் கால்​வாய் முதன்​முதலாகத் தூர்​வாரப்​பட்​டது. பின்​னர் 1964-ம் ஆண்டு தனுஷ்கோடி புயலுக்​குப்பின்​னர் தூர் வாரப்​பட்​டது. தற்​போது பாம்​பன் கால்​வாய் வழித்​தடத்​தில் ஆழம் 2 மீட்​டருக்​குக் கீழாகக் குறைந்து விட்​டது.

பாம்​பன் கால்​வா​யில் மண் நிறைந்து காணப்​படு​வ​தால் குறிப்​பிட்ட நேரத்​தில் கப்​பல்​கள், விசைப்​படகு​கள் கால்​வாயைக் கடப்​ப​தில் சிக்​கல் ஏற்​படு​வதுடன் பல நேரங்​களில் கப்​பல்​களும், படகு​களும் மணலில் சிக்கி விபத்​துகளும் ஏற்​பட்​டுள்​ளன. இதனால் பாம்​பன் கால்​வாயைத் தூர்​வார வேண்​டும் என பல ஆண்​டு​களாக மீனவர்​கள், கப்​பல் உரிமை​யாளர்​கள், கடல்​சார் வர்த்​தகர்​கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்​நிலை​யில், பாம்​பன் கால்​வா​யில் தேங்​கி​யுள்ள மணலை அகற்றி ஆழப்​படுத்த தமிழ்​நாடு கடல்​சார் வாரி​யம் மூல​மாக ஒப்​பந்​தப் புள்ளி கோரப்​பட்​டது.

அதன் அடிப்​படை​யில் ரூ.9.5 கோடிக்கு ஒப்​பந்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டு, தற்​போது தனி​யார் நிறு​வனம் மூலம் பாம்​பன் கால்​வா​யில் தேங்கியுள்ள மணலை அகற்​றும் பணி தீவிர​மாக நடை​பெற்று வரு​கிறது.

இதற்​காக பாம்​பன் குந்​து​கால் மன்​னார் வளை​குடா கடலில் மணல் தூர்​வாரும் கப்​பல் நிலை நிறுத்​தப்​பட்டு இரவு, பகலாக மணலை அகற்​றும் பணி நடந்து வரு​கிறது. கப்​பலில் உள்ள ட்ரெஜிங் பம்ப் கால்​வாய் உள்ளே நிறுத்​தப்​பட்டு அடி​யில் இருக்​கும் மணலை தண்​ணீருடன் உறிஞ்சி இழுத்து இரும்​புக் குழாய் மூலம் கரைக்கு கொண்டு வரப்​படு​கிறது. 3,500 மீட்​டர் தூரத்​துக்கு கால்​வாய் மணலை அகற்ற ஒப்​பந்​தம் செய்​யப்​பட்ட நிலை​யில் தற்​போது சுமார் 2,500 மீட்​டர் தூரத்​துக்கு மணல் அகற்​றப்​பட்​டுள்​ள​தாக அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

இம்​மாத இறு​தி​யில் மணல் அகற்​றும் பணிநிறைவு பெறும். அதன்​பின், கப்​பல்​கள் மணலில் சிக்​காமல் எவ்​விதத் தடை​யும் இன்றி செல்​லலாம். பாம்​பன் கால்​வா​யில் மணல் அகற்​றும் பணி விரைந்து நடை​பெறு​வது உள்​ளூர் மீனவ மக்​களிடையே வரவேற்​பைப் பெற்​றுள்​ளது.

<div class="paragraphs"><p>பாம்பன் கடல் கால்வாயில் கப்பல்கள், விசைப்படகுகள் தடையின்றி செல்ல தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ள கப்பல்.</p></div>
காவிரி விவகாரத்தில் முதல்வர் விஜய்யின் முடிவால் தமிழகத்துக்கு பெரும் பின்னடைவு: திமுக

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in