துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சி: அதிமுக மகளிரணி கூட்டத்தில் பழனிசாமி கருத்து

துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சி: அதிமுக மகளிரணி கூட்டத்தில் பழனிசாமி கருத்து
Updated on
1 min read

சென்னை: அதிமுகவிலிருந்து துரோகிகள் வெளியேறுவதால் தொண் டர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக வளர்ச்சி பணிகளில் மகளிரணியின் பங்கு குறித்த ஆலோசனைக் கூட்டம், பொதுச் செயலாளர் பழனிசாமி தலை மையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் பழனிசாமி பேசியதாவது: அதிமுக ஜனநாயகத்துடன் இயங்கும் ஒரு இயக்கம். பல்வேறு சாதி, மதங்களைச் சேர்ந்தவர்கள் அனைவரும் ஒன்றி ணைந்து மக்களுக்காக உழைக் கிறோம். அரை நூற்றாண்டு காலம் மக்களுக்காகவே உழைத்துக் கொண்டிருக்கும் அதிமுகவை அழிக்கவும் முடியாது, ஒழிக்கவும் முடியாது.

அதிமுகவுக்கு வாக்களித்த மக்கள்

மக்கள் அதிமுகவுக்குத்தான் வாக்களித்து எம்எல்ஏ ஆக்கியிருக்கிறார்கள். ஆனால், இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றவர்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவுடன் இணைந்து வருகிறார்கள்.

இந்த ஆட்சியை நடத்த முதல்வர் விஜய்க்கு என்ன அருகதை உள்ளது? தேர்தலில் வெற்றி -தோல்வி சகஜம். கடந்த மக்கள வைத் தேர்தலைவிட சட்டப்பேரவைத் தேர்தலில் நமது வாக்கு சதவீதம் கூடியிருக்கிறது.

மக்களுக்கு எதுவுமே செய்யாமல் விஜய் ஆட்சிக்கு வந்துள்ளார். ஆட்சிக்கு வந்தும் மக்க ளுக்கு எதுவுமே செய்யாமல், அதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து ஆட்சி நடத்தி வருகிறார்.

திண்ணைப் பிரச்சாரம்

அதிமுகவை விட்டு துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சியோடும் எழுச்சியுடன் இருக்கின்றனர். அதிமுகவை வலுப்படுத்த அனைவரும் உழைக்க வேண்டும்.

உடனடியாக மகளிரணியினர் திண்ணை பிரச்சாரத்தை தொடங்கி, எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் எனது தலைமை யிலான ஆட்சியில் செய்த சாதனைகளை மக்களுக்கு, குறிப்பாக மகளிருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கட்சிக்கு துரோகம்

நிகழ்ச்சியின் முடிவில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, “எல்லா பதவி சுகங்களையும், வசதிகளையும் அனுபவித்து விட்டு, கட்சியை விட்டுச் செல்கிறார்கள்.

பல வழக்குகளை சந்தித்துவிட்டு துரோகிகள் எங்கே சென்றால் எங்களுக்கு என்ன. தோல்வி நேரத்தில் கட்சியைத் தாங்கி பிடிக்க வேண்டிய நேரத்தில் துரோகம் செய்திருக்கிறார்கள்” என்றார்.

மகளிரணி தலைவி பா.வளரமதி கூறும்போது, “அதிமுக பல சோதனைகளைக் கடந்துதான் நிலைத்திருக்கிறது. துரோகிகள் வெளியேறி வருவதால், கட்சி தூய்மையாகிறது.

புதிய நிர்வாகிகள் உற்சாகத்துடன் பணியாற்றத் தொடங்கியுள்ளனர்” என்றார். இக்கூட்டத்தில் கட்சியின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சி: அதிமுக மகளிரணி கூட்டத்தில் பழனிசாமி கருத்து
தவெக தோழமை கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்காத நிலையில் முதல்வருடன் கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in