அனைத்து தேர்தல்களுக்கும் தயாராக இருங்கள்: மாவட்டச் செயலாளர்களுக்கு பழனிசாமி அறிவுறுத்தல்

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். | படம்: எஸ்.சத்தியசீலன் |

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். | படம்: எஸ்.சத்தியசீலன் |

Updated on
1 min read

சென்னை: அனைத்து தேர்​தல்​களுக்​கும் இப்​போதே தயா​ராக வேண்​டும் என்று அதி​முக மாவட்​டச் செய​லா​ளர்​கள் கூட்​டத்​தில் கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

அதி​முக எம்​எல்​ஏக்​கள் பழனி​சாமி மற்​றும் சி.​வி.சண்​முகம் தலை​மை​யில் 2 அணி​களாக செயல்​பட்டு வரு​கின்​றனர். ஏற்​கெனவே 6 எம்​எல்​ஏக்​கள் ராஜி​னாமா செய்​து​விட்​டு, தவெக​வில் இணைந்​து​விட்​டனர். முக்​கிய நிர்​வாகி​களும் அதி​முக​வில் இருந்து வில​கி, தவெக​வில் இணைந்து வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், கட்​சி​யின் மாவட்​டச் செய​லா​ளர்​கள் கூட்​டம் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி தலை​மை​யில் சென்​னை​யில் உள்ள தலைமை அலு​வல​கத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதில் பழனி​சாமி பேசி​ய​தாவது: தவெக அரசு பல்​வேறு சட்ட சிக்​கல்​களை சந்​தித்து வரு​கிறது.

எனவே, நீண்ட காலம் நீடிக்​காது. விரை​வில் தேர்​தல் வரலாம் அல்​லது 2029 மக்​கள​வைத் தேர்​தலுடன், தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலும் நடை​பெற வாய்ப்பு உள்​ளது. அடுத்த ஆண்டு தொடக்​கத்​தில் உள்​ளாட்​சித் தேர்​தல் நடை​பெற உள்​ளது.

சட்​டப்பேரவை இடைத்​தேர்​தல், சட்டப்பேர​வைத்தேர்​தல், உள்​ளாட்​சித் தேர்​தல், மக்​கள​வைத் தேர்​தல் என அனைத்து தேர்​தல்​களை​யும் எதிர்​கொள்ள மாவட்​டச் செய​லா​ளர்​கள் இப்​போதே தயா​ராக வேண்​டும்.

தவெக அறி​வித்த திட்​டங்​களை செயல்​படுத்​தும் அளவுக்கு அரசிடம் நிதி இல்​லை. சட்​டப்​பேர​வை​யில் ஆக்​கப்​பூர்​வ​மான விவாதங்​கள் நடப்​ப​து இல்​லை. தவெக எம்​எல்​ஏக்​கள், அமைச்​சர்​களின் செயல்​பாடு​கள் மோச​மாக உள்​ளதை மக்​கள் பார்த்து வரு​கின்​றனர்.

விலை​வாசி உயர்​வு, தொடர் கொலைகள், லாக்​கப் மரணங்​கள், தவெக நிர்​வாகி​களே பாலியல் குற்​றச்​சாட்​டுக்கு உள்​ளாவது போன்ற காரணங்​களால், இப்போது பெற்ற வெற்​றியைக்​கூட வரும் தேர்​தல்​களில் தவெக பெற வாய்ப்பு இல்​லை.

எனவே, கிளை அளவில் கட்​சியை வளர்த்​து, அதி​முக வெற்​றிக்கு பாடுபட வேண்டும். இவ்​வாறு அவர் அறி​வுறுத்​தி​னார். அவைத் தலை​வர் தமிழ்​மகன் உசேன், துணைப் பொதுச் செய​லா​ளர் கே.பி.​முனுசாமி, பொருளாளர் திண்​டுக்​கல் சீனி​வாசன், தலைமை நிலை​யச் செய​லா​ளர் வரகூர் அருணாச்​சலம் உள்​ளிட்​டோர் பங்கேற்றனர்.

<div class="paragraphs"><p>அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். | படம்: எஸ்.சத்தியசீலன் |</p></div>
மழையில் நெல் நனைவதை தடுக்க பிரேமலதா கோரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in