அதிமுகவில் சிறப்பு பொதுக்குழு நடத்த கையெழுத்து வேட்டை: நீதிமன்றத்தை நாட பழனிசாமி தரப்பு முடிவு

அதிமுகவில் சிறப்பு பொதுக்குழு நடத்த கையெழுத்து வேட்டை: நீதிமன்றத்தை நாட பழனிசாமி தரப்பு முடிவு
Updated on
2 min read

சென்னை: அ​தி​முக​வில் ஏற்​பட்​டுள்ள உட்​கட்​சிப் பூசல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலை​யில், கட்​சி​யில் சிறப்பு பொதுக்​குழுவை கூட்​டு​வதற்​காக பழனி​சாமிக்கு எதி​ராகச் சண்​முகம் தரப்பு அதிரடி​யாகக் கையெழுத்து வேட்​டை​யில் இறங்​கி​யுள்​ளது. மறு​புறம் சண்​முகம் தரப்​புக்கு எதி​ராக நீதி​மன்​றத்தை நாட பழனி​சாமி தரப்பு முடிவு செய்​திருப்​ப​தால் அக்​கட்​சி​யில் பெரும் பரபரப்பு ஏற்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து அதி​முக வட்​டாரங்​கள் கூறிய​தாவது: சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி​யை தொடர்ந்​து, திமுக​வின் ஆதர​வுடன் ஆட்​சி​யைப் பிடிக்​கப் பழனி​சாமி காய் நகர்த்​தி​ய​தாகத் தகவல்​கள் வெளி​யாகின. இதற்கு கடும் எதிர்ப்பு தெரி​வித்​து, முன்​னாள் அமைச்​சர் சி.​வி.சண்​முகம் தலை​மை​யில் ஒரு தரப்​பினர் தனி அணி​யாகச் செயல்​படத் தொடங்​கினர்.

இதன் உச்​சக்​கட்​ட​மாக, சட்​டப்​பேர​வை​யில் நடை​பெற்ற நம்​பிக்கை வாக்​கெடுப்​பில் சி.​வி.சண்​முகம் ஆதரவு எம்​.எல்​.ஏக்​கள் 25 பேர் தவெக அரசுக்கு ஆதர​வாக வாக்​களித்​தனர். அதே​நேரம், பழனி​சாமி தலை​மையி​லான 22 எம்​.எல்​.ஏக்​கள் அரசுக்கு எதி​ராக வாக்​களித்​தனர்.

கொறடா உத்​தரவை மீறி தவெக அரசுக்கு ஆதர​வாக வாக்​களித்த 25 பேரை​யும் மாவட்​டச் செய​லா​ளர் உள்​ளிட்ட கட்​சிப் பொறுப்​பு​களில் இருந்து பழனி​சாமி அதிரடி​யாக நீக்​கி​விட்​டு, அந்த இடங்​களுக்​குத் தனது ஆதர​வாளர்​களை நியமித்​தார். மேலும், இரு தரப்​பும் மாறி மாறி சபா​நாயகர் ஜே.சி.டி.பிர​பாகரிடம் புகார்​களை அளித்​துள்​ளனர்.

இதையடுத்​து, பழனி​சாமியைப் பதவி​யில் இருந்து நீக்​கு​வதற்​காக அல்​லது அவரைப் பணிய வைப்​ப​தற்​காகச் சிறப்​புப் பொதுக்​குழு​வைக் கூட்​டும் முயற்​சி​யில் சண்​முகம் தரப்பு இறங்​கி​யுள்​ளது. அதி​முக​வின் சட்​ட​வி​தி​களின்​படி, ஐந்​தில் ஒரு பங்கு பொதுக்​குழு உறுப்​பினர்​கள் கையெழுத்​திட்டு மனு அளித்​தால், சிறப்​புப் பொதுக்​குழு​வைக் கூட்ட முடி​யும். இதைப் பயன்​படுத்​தி, மாவட்ட வாரி​யாகப் பொதுக்​குழு உறுப்​பினர்​களைச் சந்​தித்​துக் கையெழுத்து பெறும் பணி​யைச் சண்​முகம் தரப்பு சட்​டமன்ற உறுப்​பினர்​கள் தீவிர​மாகத் தொடங்​கி​யுள்​ளனர்.

பொதுக்​குழு கூட்​டப்​பட்​டால் தனக்கு எதி​ராகக் கடுமை​யான விமர்​சனங்​கள் எழும் என்​ப​தால், இப்​போதைக்​குக் கூட்​டத்​தைக் கூட்ட பழனி​சாமி தயா​ராக இல்​லை. சண்​முகம் தரப்​பின் இந்த ‘கையெழுத்து வேட்​டை’ வியூ​கத்தை முறியடிக்க, சென்னை பசுமைவழிச் சாலை​யில் உள்ள தனது இல்​லத்​

தில் ஆதரவு எம்​.எல்​.ஏக்​கள் மற்​றும் முக்​கிய நிர்​வாகி​களு​டன் பழனி​சாமி நேற்று அவசர ஆலோ​சனை​யில் ஈடு​பட்​டார். இந்த ஆலோ​சனைக் கூட்​டத்​திற்​குப் பிறகு, "அதி​முக பொதுக்​குழு​வைக் கூட்ட வேண்​டும் என சண்​முகம் தரப்​பிலிருந்து யாராவது வந்து கையெழுத்து கேட்​டால், யாரும் எக்​காரணம் கொண்​டும் கையெழுத்​துப் போடக் கூடாது” என்று தனது ஆதர​வாளர்​களுக்​குப் பழனி​சாமி கண்​டிப்​பான உத்​தர​வைப் பிறப்​பித்​துள்​ளார்.

மறு​புறம், தவெக அரசுக்கு ஆதர​வாக வாக்​களித்த சண்​முகம் தரப்பு எம்​.எல்​.ஏக்​களை தகுதி நீக்​கம் செய்ய வலி​யுறுத்​திப் பழனி​சாமி தரப்​பில் ஆளுநரை நேரடி​யாக சந்​தித்து கோரிக்கை வைக்க திட்​ட​மிட்​டிருந்​தனர். இதற்​காக, நேற்று தமிழகம் வந்​திருந்த ஆளுநரைச் சந்​திக்​கப் பழனி​சாமி தரப்பு நேரம் கேட்​டிருந்​தும், அவர்​களுக்கு ஆளுநர் தரப்​பிலிருந்து அப்​பா​யிண்ட்​மெண்ட் கிடைக்​க​வில்லை எனக் கூறப்​படு​கிறது.

இதனால், இந்த விவ​காரத்​தில் சபா​நாயகர் மற்​றும் ஆளுநரின் நடவடிக்​கைகளுக்​காகக் காத்​தி​ராமல், நேரடி​யாக நீதி​மன்​றத்தை நாடி சண்​முகம் தரப்பு எம்​.எல்​.ஏக்​களை தகுதி நீக்​கம் செய்​யப் பழனி​சாமி தரப்பு தீவிர​மாக வேலைகளைத் தொடங்​கி​யுள்​ளது. அதே நேரத்​தில், சண்​முகம் அணி​யில் இருக்​கும் எம்​.எல்​.ஏக்​களை மீண்​டும் தங்​கள் பக்​கம் இழுக்​கும் ரகசி​யப் பேச்​சு​வார்த்​தைகளும் பழனி​சாமி தரப்​பால் முடுக்கி விடப்​பட்​டுள்​ளன. இதனால் அதி​முக​வில் உச்​சகட்ட பரபரப்பு ஏற்​பட்​டது. இவ்​வாறு அந்த வட்​டாரங்​கள் கூறின.

இரண்டு மா.செ.க்​கள் நீக்​கம்: இதனிடையே, அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “புதுக்​கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்​பில் இருக்​கும் வைர​முத்​து, தென்​காசி வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்​பில் இருக்​கும் கிருஷ்ண​முரளி ஆகியோர் அவர்​கள் வகித்து வரும் பொறுப்​பு​களில் இருந்​து விடுவிக்​கப்​படு​கிறார்​கள்​” எனத்​ தெரி​வித்​துள்​ளார்​.

அதிமுகவில் சிறப்பு பொதுக்குழு நடத்த கையெழுத்து வேட்டை: நீதிமன்றத்தை நாட பழனிசாமி தரப்பு முடிவு
நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in