விவசாயிகளுக்கு ஏமாற்றம் தந்த வேளாண் பட்ஜெட்: பழனிசாமி விமர்சனம்

விவசாயிகளுக்கு ஏமாற்றம் தந்த வேளாண் பட்ஜெட்: பழனிசாமி விமர்சனம்
Updated on
1 min read

சென்னை: வேளாண் பட்ஜெட் குறித்து அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: வேளாண் பட்​ஜெட்​டில் விவசாயிகள் பெரும் எதிர்​பார்ப்​போடு இருந்​தார்​கள்.

ஆனால், அவர்​களுக்கு ஏமாற்​றம்​தான் மிஞ்​சி​யது. இந்த பட்​ஜெட்​டில், முக்​கிய​மான திட்​டங்​களோ அல்​லது விவ​சா​யிகளுக்​குப் பயனளிக்​கும் புதிய அறி​விப்​பு​களோ எது​வுமில்​லை.

தேர்​தல் நேரத்​தில் இனிக்​க இனிக்​க தேர்​தல் அறி​விப்​பு​களை தவெக கொடுத்​தது. ஆட்​சிக்கு வந்த பிறகு தாக்​கல் செய்​துள்ள இந்த முதல் வேளாண் பட்​ஜெட்​டில் அந்த வாக்​குறு​தி​கள் எதை​யும் நிறைவேற்​றாமல் விவ​சா​யிகளை ஏமாற்​றி​யுள்​ளது.

அதி​முக ஆட்​சிக் காலத்​தில் 'குடிம​ராமத்​து' என்ற அற்​புத​மான திட்​டத்​தைக் கொண்டு வந்து ஏரி, குளம், குட்டை என அனைத்​தை​யும் தூர்​வாரினோம்.

சுமார் 26,000 நீர்​நிலைகள் தூர்​வாரப்​பட்​ட​தால்​தான், இன்​றைய வறட்​சிக் காலத்​தி​லும் நிலத்​தடி நீர்​மட்​டம் உயர்ந்து விவ​சா​யிகளுக்​குக் கைகொடுக்​கிறது.

ஆனால், தற்​போதைய அரசு அத்​திட்​டத்தை முழு​மை​யாகச் செயல்​படுத்​தாமல், பல துறை​களை இணைத்து வெறும் ரூ.1,500 கோடி மட்​டும் அறி​வித்​துள்​ளது.

ஏற்​கெனவே தாக்​கல் செய்​யப்​பட்ட பொது பட்​ஜெட்​டுக்கு ‘பூஜ்ஜி​யம்’ மதிப்​பெண் வழங்​கினோம். தற்​போது தாக்​கல் செய்​யப்​பட்​டுள்ள இந்த வேளாண் பட்​ஜெட்​டுக்கு ‘மைனஸ் பூஜ்ஜி​யம்​’​தான்​ வழங்​க முடி​யும்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

விவசாயிகளுக்கு ஏமாற்றம் தந்த வேளாண் பட்ஜெட்: பழனிசாமி விமர்சனம்
தொகுதி மறுவரையறை தொடர்பாக விவாதிக்க முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்.பி.க்கள் கூட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in