மதச்சார்பின்மை கொள்கையில் அணுவளவும் மாற மாட்டோம்: இஃப்தார் நிகழ்ச்சியில் பழனிசாமி உறுதி

மதச்சார்பின்மை கொள்கையில் அணுவளவும் மாற மாட்டோம்: இஃப்தார் நிகழ்ச்சியில் பழனிசாமி உறுதி
Updated on
1 min read

சென்னை: மதச்​சார்​பின்​மை, சமூக நல்​லிணக்​கம் உள்​ளிட்ட அடிப்​படை கொள்​கை​யில் இருந்து அணுவள​வும் பிறழ மாட்​டோம் என்று அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தெரி​வித்​தார்.

அதி​முக சார்​பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்​சி, சென்னை எழும்​பூரில் நேற்று நடை​பெற்​றது. இதில் கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி பேசி​ய​தாவது: ஒரு கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் தனது சொந்த செல​வில் இஃப்தார் நிகழ்வு நடத்​து​வதை முதலில் தொடங்கி வைத்​தவர் ஜெயலலி​தா.

இஸ்லாமியர்களை அவர் அதிகம் நேசித்தார். அவரது விசு​வாசத் தொண்​டர்​களான நாம், அதை தொடர்ந்து நடத்​திக்​ கொண்டிருக்​கிறோம். அனைத்து சமயங்​களை​யும் மதிக்​கும் மக்​களைக் கொண்ட அற்​புத​மான மாநிலம் தமிழகம்.

உங்​கள் ஆசீர்​வாதத்​தை​யும் அன்​பை​யும் பெற்று நானும் மதச்​சார்​பின்​மை, சமய நல்​லிணக்​கம் உள்​ளிட்​ட​வற்றை உயிர் மூச்​செனகொண்டு தொடர்ந்து உழைத்து வரு​கிறேன். எம்​ஜிஆர், ஜெயலலிதா ஆட்​சிக் கால​மும், எனது ஆட்​சியும் சிறு​பான்மை மக்​களுக்கு பொற்​கால​மாக அமைந்​ததை வரலாறு சொல்​லும்.

<div class="paragraphs"><p>அதிமுக சார்பில் இஃதார் நோன்பு திறப்பு எழும்பூரில் நேற்று நடைபெற்றது. அதிமுக  பொதுச்செயலாளர் பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அமமுக தலைவர் டிடிவி தினகரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p></div>

அதிமுக சார்பில் இஃதார் நோன்பு திறப்பு எழும்பூரில் நேற்று நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அமமுக தலைவர் டிடிவி தினகரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த ஆட்​சி​யின் அவலங்​களை தூய்​மைப்​படுத்த வேண்​டிய கடமை நமக்கு உள்​ளது. அதை அர்ப்​பணிப்​பாலும், அன்​பாலும் செய்​ய வேண்​டும். எந்​தச் சூழ்​நிலை​யிலும் அடிப்​படைக் கொள்​கை​யில் இருந்து அணுவள​வும் பிறழ மாட்​டோம்.

மதச்​சார்​பின்​மை, சமூக நல்​லிணக்​கம், சட்​டம் ஒழுங்கு பாது ​காப்​பில் சமரசமற்ற உறு​தி, எம்​ஜிஆர், ஜெயலலிதா வழி​யில் எல்​லோருக்​கும் எல்​லாம் என்​ற​வாறு ஆட்சி நடத்​து​வோம்.

திமுக​வும், கூட்​ட​ணிக் கட்​சி​யினரும் ஏதோ அவர்​கள்​தான் சிறு​பான்மை மக்​களை காத்​துக்​கொண்​டிருப்​பது போல தோற்​றத்தை ஏற்​படுத்​திக் கொண்​டிருக்​கிறார்​கள். உண்​மை​யில் சிறு​பான்மை மக்​களை கண்ணை இமை காப்​பது​போல காப்​பது அதி​முக தான் என்றார்.

இந்​நிகழ்ச்​சி​யில், அதி​முக அவைத் தலை​வர் தமிழ்​மகன் உசேன், பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன், தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன், ஐஜேகே நிறு​வனர் பாரிவேந்​தர், புரட்சி பாரதம் தலை​வர் பூவை ஜெகன்​மூர்த்​தி உள்​ளிட்​டோர்​ கலந்​து கொண்​டனர்​.

மதச்சார்பின்மை கொள்கையில் அணுவளவும் மாற மாட்டோம்: இஃப்தார் நிகழ்ச்சியில் பழனிசாமி உறுதி
சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை சீர்செய்ய வலியுறுத்தி திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in