சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை சீர்செய்ய வலியுறுத்தி திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

திமுக கூட்டணி கூட்டணி கட்சிகள் சார்பில், தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றது. சென்னை சைதாப்பேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திமுக கூட்டணி கூட்டணி கட்சிகள் சார்பில், தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றது. சென்னை சைதாப்பேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் நிலவி வரும் சமையல் எரி​வாயு தட்​டுப்​பாட்​டைச் சீர்​செய்ய வேண்​டும் என்பன உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, திமுக மற்​றும் அதன் கூட்​ட​ணிக் கட்​சிகள் சார்​பில் நேற்று கண்டன ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது.

மத்​திய அரசின் தவறான வெளி​யுறவுக் கொள்​கை​யாலும், போதிய முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை எடுக்​கத் தவறிய​தா​லும் நாடு முழு​வதும் சிலிண்​டர் தட்​டுப்​பாடு ஏற்​பட்டு மக்​கள் கடும் அவதிக்​குள்​ளாகி வரு​கின்​றனர். இதனைச் சரி செய்ய, மத்​திய அரசு எவ்​வித நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை.

தமிழகத்​திற்​கான கல்வி நிதி, 100 நாள் வேலைத் திட்ட நிதி, குடிநீர் இணைப்பு நிதி என எதனை​யும் ஒதுக்​காமல் தொடர்ந்து தமிழகத்​தைப் புறக்​கணித்து வரும் மத்​திய பாஜக அரசை கண்​டித்து, திமுக மற்றும் அதன் கூட்​டணி கட்சிகள் சார்​பில் சென்​னை​யில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மா.சுப்​பிரமணி​யன், சேகர்​பாபு, வைகோ, காதர் மொகிதீன், செல்​வப்​பெருந்​தகை, வீர​பாண்​டியன், தொல்​.​திரு​மாவளவன், ஜவாஹிருல்​லா, எல்​.சுதீஷ், கி.வீரமணி, கே.​பால​கிருஷ்ணன் உள்​ளிட்ட தலை​வர்​கள் பங்​கேற்​றனர். அப்​போது, “சிலிண்​டர் தட்​டுப்​பாட்டை உடனே போக்க வேண்​டும், தமிழகத்​திற்​கான நிதி​யைக் குறைக்​காதே” என்பன உள்​ளிட்ட முழக்​கங்​கள் எழுப்​பப்​பட்​டன.

ஆர்ப்​பாட்​டத்​தில் வைகோ பேசுகை​யில், “மத்​திய அரசின் மக்​கள் விரோத எண்​ணங்​களைத் தவிடு​பொடி​யாக்​கும் வகை​யில், நமது கூட்​ட​ணி​யின் வலிமை​யால் தமிழகத்​திற்​குள் பாஜகவை நுழைய விட​மாட்​டோம் என சபதமேற்​போம்” என்​றார்.

திரு​மாவளவன் பேசுகை​யில், “காந்​தி​யின் மீது பாஜக​வுக்​குத் தீராத வெறுப்பு இருக்​கிறது. 100 நாள் வேலைத் திட்​டத்தை (125 நாட்​கள் வேலை) உறுதி செய்து நிதி ஒதுக்க வேண்​டும்” என்​றார். கே.​பால​கிருஷ்ணன், “கடந்த 20 ஆண்​டு​களாகச் சிறப்​பாகச் செயல்​பட்டு வந்த இந்​தத் திட்​டத்​திற்​கு, மோடி ஆட்​சிக்கு வந்த பிறகு சாவுமணி அடித்து விட்​டார்​கள்” என்​றார்.

உடனே சீர் செய்ய வேண்​டும் இந்த ஆர்ப்​பாட்​டம் தொடர்​பாக முதல்​வர் ஸ்டா​லின் வெளி​யிட்​டுள்ள எக்ஸ் பதி​வில், “வெளி​யுறவுக் கொள்​கை​யிலும் #FailureModel எனப் பெயரெடுத்​துள்ள பாஜக அரசின் தவறான முடிவு​களால் கடுமை​யான சிலிண்​டர் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ளது.

முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளும் இல்​லை. ​மக்​களுக்​குத்​தான் இவர்​களால் தொல்​லை. இதனைக் கண்​டித்​து, தமிழ்​நாடெங்​கும் நமது மதச்​சார்​பற்ற முற்​போக்​குக் கூட்​ட​ணி​யினர் மாபெரும் ஆர்ப்​பாட்​டங்​களை நடத்​தி​யுள்​ளனர். மத்​திய அரசு உடனடி​யாக நிலை​மை​யைச் சீர்​செய்​ய முன்வர வேண்​டும்” எனத் தெரிவித்​துள்​ளார்​.

<div class="paragraphs"><p>திமுக கூட்டணி கூட்டணி கட்சிகள் சார்பில், தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றது. சென்னை சைதாப்பேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p></div>
காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் நாடு நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது: தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in