புதுச்சேரியில் போட்டியிடும் 2 அதிமுக வேட்பாளர்களை அறிவித்தார் பழனிசாமி!

ஏ.அன்பழகன்,ஏ.காந்தி

ஏ.அன்பழகன்,ஏ.காந்தி

Updated on
1 min read

சென்னை: புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 9.4.2026 அன்று நடைபெற உள்ள புதுச்சேரி மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உப்பளம் தொகுதியில் புதுச்சேரி மாநிலக் கழகச் செயலாளர் ஏ. அன்பழகன் மற்றும் உருளையன்பேட்டையில் புதுச்சேரி மாநிலக் கழக முன்னாள் துணைச் செயலாளர் ஏ.காந்தி ஆகியோர் போட்டியிடுவார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>ஏ.அன்பழகன்,ஏ.காந்தி</p></div>
ராமதாஸ் - சசிகலா கூட்டணி: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ‘அதிர்ச்சி’... ஏன்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in