பழநி நில முறைகேடு: திமுக பிரமுகர் உள்பட பதிவாளர், நிலத்தை வாங்கியோர் வீடுகளில் சோதனை

முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக சிபிசிஐடி தகவல்
பழநி நில முறைகேடு: திமுக பிரமுகர் உள்பட பதிவாளர், நிலத்தை வாங்கியோர் வீடுகளில் சோதனை
Updated on
2 min read

பழநி: பழநி​யில் ரூ.100 கோடி மதிப்​புள்ள 1.40 ஏக்​கர் நிலத்தை முறை​கே​டாக பதிவு செய்த விவ​காரம் தொடர்​பாக மாவட்​டப் பதி​வாளர், சார்பதி​வாளர், நிலத்தை விற்​றவர், வாங்​கியோர், திமுக நிர்​வாகி உள்பட 10-க்​கும் மேற்​பட்​டோரின் வீடு​களில் சிபிசிஐடி போலீ​ஸார் அதி​காலை 4 மணி முதல் சோதனை மேற்​கொண்​டனர்.

இந்த வழக்​கை, சிபிசிஐடி டிஎஸ்பி அஜய் தங்​கம் தலை​மையி​லான போலீ​ஸார் விசா​ரித்து வரும் நிலை​யில், நிலத்தை விற்ற திருப்​பு​கழ் சுவாமிகள், முரு​க​தாஸ் சுவாமிகள் மற்​றும் தண்​ட​பாணி அறக்​கட்​டளை​யைச் சேர்ந்த முரு​க​தாஸ், நிலத்தை வாங்​கிய உடுமலைப்​பேட்டை பாப்​பான்​குளத்​தைச் சேர்ந்த வெள்​ளைத்​துரை மற்​றும் பழநி டி.கே.என்​.புதூரைச் சேர்ந்த சேதுபதி ஆகியோர் தலைமறை​வாகினர். அவர்​களை தேடும் பணி நடந்து வரு​கிறது.

இதனிடையே, நேற்று திண்​டுக்​கல் ரவுண்ட் ரோடு பகு​தி​யில் உள்ள சார்பதி​வாளர் ஜஸ்​டின் மணி​கண்​டன் வீட்​டுக்கு காலை 8 மணிக்கு வந்த சிபிசிஐடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலை​மையி​லான போலீ​ஸார் பிற்​பகல் 1 மணி வரை சோதனை நடத்​தினர். அங்​கிருந்து முக்​கிய ஆவணங்​களை கைப்​பற்​றினர். இந்த வழக்கு தொடர்​பாக, நீதி​மன்​றம் ஜஸ்​டின் மணி​கண்​ட​னுக்கு ஆக.3-ம் தேதி வரை இடைக்​கால முன்​ஜாமீன் வழங்​கி​யுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

இதே​போல், நிலத்தை வாங்​கிய​வர்​களில் ஒரு​வ​ரான பழநி டி.கே.என்​.புதூரைச் சேர்ந்த சேதுபதி வீட்​டில் 2 மணி நேரம் சோதனை​யிட்​டனர். சேதுபதி தலைமறை​வாக உள்ள நிலை​யில், அவரது மனை​வி​யிடம் மட்​டும் விசா​ரித்​து​விட்​டு, அவரது மொபைல் போன், சேதுபதி தொடர்​பான ஆவணங்​களை போலீ​ஸார் கைப்​பற்​றினர்.

மேலும், பழநி இடும்​பன் மலை அடி​வாரத்​தில் உள்ள சேதுப​தி​யின் நெருங்​கிய நண்​ப​ரான திமுக வார்டு செய​லா​ளர் லட்​சுமணன் வீட்​டுக்கு அதி​காலை 4 மணிக்கு வந்த சிபிசிஐடி போலீ​ஸார், 3 மணி நேரத்​துக்​கும் மேலாக சோதனை​யிட்​டனர். அங்கு சேதுபதி தொடர்​பான ஆவணங்​கள் ஏதும் கிடைக்​காத​தால், லட்​சுமணன் சம்​பந்​தப்​பட்ட சொத்து பத்​திரங்​களை எடுத்​துச் சென்​றனர்.

லட்​சுமணன் மாரடைப்பு காரண​மாக, கடந்த 3 நாட்​களுக்​கும் மேலாக கோவை ​தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கிறார். இவர் பத்​திரத்​தில் சாட்சி கையெழுத்​திட்​டிருக்​கலாம் என கூறப்படுகிறது. இதே​போல், சேதுப​தி​யின் இன்​னொரு நண்​ப​ரான பழநி பொன்​னாபுரத்​தில் உள்ள மயில்​சாமி என்​பவரது வீடு மற்​றும் தோட்​டத்​தில் சோதனை​யிட சென்​ற​போது, அவர் இல்​லாத​தால் பிற்​பகல் வரை காத்​திருந்து சோதனை நடத்​தினர்.

இவர்​கள் மட்​டுமின்​றி,தண்​ட​பாணி சுவாமிகள் மடத்​துக்​குச் சொந்​த​மான நிலத்தை முறை​கே​டாக பதிவு செய்ய உதவி​யாக இருந்த ஒட்​டன்​சத்​திரத்​தைச் சேர்ந்த நிலத்​தரகர் ஜெயபிர​காஷ் மற்​றும் பத்​திர எழுத்​தரும், வழக்​கறிஞரு​மான விருப்​பாச்​சி​யைச் சேர்ந்த சிவக்​கு​மார் ஆகியோரது வீடு​களி​லும் 4 மணி நேரம் சோதனை நடத்​தினர். இதில், முக்​கிய ஆவணங்​களை​யும் கைப்​பற்​றினர். இவர்​கள் இரு​வரும், சார் பதி​வாளர் ஜஸ்​டின் மணி​கண்​டனின் நெருங்​கிய நண்​பர்​கள் என்று கூறப்​படு​கிறது.

இதனிடையே, பழநி பத்​திரப்​ப​திவு அலு​வல​கத்​துக்கு காலை 10 மணிக்கு சிபிசிஐடி எஸ்பி ஷாஜிதா தலை​மை​யில் 10-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் வந்​தனர். அங்கு பதி​வாளர்​கள், அலு​வலர்​களிடம் தனித்​தனி​யாக விசா​ரித்​தனர். அப்​போது, ஜூலை 6-ம் தேதி நடை​பெற்ற பத்​திரப்​ப​திவு ஆவணங்​கள், பதிவுக்கு வந்​தவர்​களின் விவரங்​கள், சிசிடிவி கேம​ரா​வில் பதி​வான காட்சிகளை ஆய்வு செய்​தனர். பின்​னர், பழநி ரயில் நிலைய பகுதியில் உள்ள மாவட்​டப் பதி​வாளர் சசிகலா வீட்​டிலும் சோதனை நடத்​தினர்.

இதேபோல், திருப்​பூர் மாவட்​டம் மடத்​துக்​குளம் அருகே உள்ள பாப்​பான்​குளத்​தைச் சேர்ந்த வெள்​ளைத் ​துரை வீட்டில் கோவை சிபிசிஐடி காவல் ஆய்​வாளர் கேசவன் தலை​மை​யிலான போலீஸார் விசா​ரணை நடத்தச் சென்​றனர். வீடு பூட்​டப்​பட்​டிருந்த நிலை​யில், பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து சோதனை​ நடத்தினர். இதில் நிலப்​ப​திவு தொடர்​பான முக்​கிய ஆவணங்​களை கைப்​பற்​றியதாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன. இதேபோல், அவரது நண்​பர்​கள், உறவினர்​களின் வீடு​களி​லும் விசா​ரணை நடத்தினர்.

நிலத்தை பத்​திரப்​ப​திவு செய்ய முயன்ற கடந்த மார்ச் மாதம் முதல், நிலத்தை விற்​றவர், வாங்​கியோர், நிலத்​தரகர் ஆகியோ​ருடன் நேரடி​யாக​வும், மொபைல் போன் மற்​றும் வாட்ஸ் அப் அழைப்​பு, ஆடியோ மெசேஜ் மூல​மும் தொடர்​பில் இருந்த பலரிடமும் விசா​ரிக்க போலீ​ஸார் முடிவு செய்​துள்​ளனர்​.

நெல்லையிலும் விசாரணை: ​நிலமோசடி பத்​திரப்​ப​திவை திருப்​பு​கழ் சுவாமிகள், முரு​க​தாஸ் சுவாமிகள் அறக்​கட்​டளை​யின் நிர்​வாகி​கள் செய்து கொடுத்​துள்​ள​தாக கிடைத்த தகவலின்​பேரில், அது குறித்​தும் விசா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது. திருநெல்​வேலி டவுன் சாலை தெரு சண்​முகசுந்​தரம், பாளை​யங்​கோட்டை குமரகுருபரன், சிவகு​மார், ஆகியோ​ருக்கு இந்த பத்​திரப்​ப​திவு விவ​காரத்​தில் தொடர்பு இருப்​ப​தாகத் தகவல் கிடைத்​தது.

அதன்​பேரில், டவுன் சாலியர் தெரு​வில் வசித்து வரும் சண்​முகசுந்​தரத்​திடம் சிபிசிஐடி போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டனர். பந்​தல் அலங்​காரம் செய்​து​வரும் சண்​முகசுந்​தரத்​திடம் நேற்று காலை முதல் நீண்ட நேர​மாக விசா​ரணை நடத்​தப்​பட்​டது. நேற்று மாலை மற்ற இரு​வரிட​மும் விசா​ரணை மேற்​கொள்​ளப்​பட்​டது.

பழநி நில முறைகேடு: திமுக பிரமுகர் உள்பட பதிவாளர், நிலத்தை வாங்கியோர் வீடுகளில் சோதனை
“சோனம் வாங்சுக்கின் பொறுமையை சோதிக்கக் கூடாது” - மத்திய அரசுக்கு அண்ணா ஹசாரே வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in