தமிழக அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து சாதிய படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வைப்போம்: பெ.சண்முகம் உறுதி

தமிழக அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து சாதிய படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வைப்போம்: பெ.சண்முகம் உறுதி
Updated on
1 min read

சென்னை: தமிழக அரசுக்கு தொடர்ந்து அழுத்​தம் கொடுத்து, சாதிய படு​கொலைகளை தடுக்க தனிச்​சட்​டத்தை இயற்ற வைப்​போம் என, மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம் உறு​திபட தெரி​வித்​துள்​ளார்.

தமிழ்​நாடு தீண்​டாமை ஒழிப்பு முன்​னணி சார்​பில் உரு​வாக்​கப்​பட்ட “இணை​யர் தேர்வு உரிமை நிலை​நாட்​டு​தல் மற்​றும் கவுரம் என்ற பெயரிலான கொலைகள், குற்​றங்​கள் தடுப்பு மசோதா தமிழ்​நாடு - 2026 மாதிரி சட்​டம்”, தி.நகரில் உள்ள மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலக் குழு அலு​வல​கத்​தில் நேற்று வெளி​யிடப்​பட்​டது.

கட்​சி​யின் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம் வெளி​யிட்​டார். பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தமிழகத்​தில் சாதிய படு​கொலைகள் என்​பது தினந்​தோறும் நடந்து கொண்​டிருக்​கின்​றன.

சாதி, மத மறுப்பு திரு​மணங்​களை செய்​தவர்​கள் எப்​போது, என்ன நடக்​கும் என்று தெரி​யாமலே ஒரு அச்​சத்​திலேயே வாழ்ந்து வரு​கின்​றனர்.

சாதிய படு​கொலையை தடுக்க தமிழக அரசு என்​னென்ன முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை எடுக்​க வேண்​டும் என, சென்னை உயர்​நீ​தி​மன்​றம் ஏற்​கனவே பரிந்​துரைகளை வழங்​கி​யிருந்​தும், அவை எது​வும் தமிழக அரசால் நடை​முறைப்​ படுத்​தப்படவில்​லை.

சாதிய படு​கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்​டும். இதற்​காக, கடந்த ஆட்​சி​யில் நீதிபதி கே.என்​.​பாஷா தலை​மை​யில் ஒரு ஆணை​யம் அமைக்​கப்​பட்​டது.

இந்த சட்​டத்​தில் என்​னென்ன அம்​சங்​கள் இடம்​பெற வேண்​டும் என்ற விரி​வான மனுக்​கள் நீதிப​தி​யிடம் சமர்ப்​பிக்​கப்​பட்​டுள்​ளன. இந்த ஆணை​யம் விரை​வாக பரிந்​துரைகளை மாநில அரசுக்கு வழங்​க வேண்​டும். அதைக்​ கொண்டு, தமிழக அரசு சாதிய படு​கொலைகளை தடுப்​ப​தற்​கான சட்​டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்​டும்.

தவெக அரசு இந்த சட்​டத்தை நிறைவேற்​று​மா? இல்​லையா என்​பது கேள்​வியல்ல. அரசுக்கு தொடர்ச்​சி​யான அழுத்​தம் கொடுத்து, இச்​சட்​டத்தை நிறைவேற்ற வைப்​போம். அதே​போல், சாதி மறுப்பு திரு​மணங்​கள் செய்​து​ கொள்​பவர்​களுக்கு வேலை​வாய்ப்​பில் முன்​னுரிமை அளிக்​கப்பட வேண்​டும்.

இதன்​மூலமே, சாதி மறுப்பு திரு​மணங்​களை ஊக்​குவிக்க முடி​யும். இன்​றைக்கு வெளி​யிடப்​பட்ட மசோ​தா​வில் சாதி மறுப்பு திரு​மணத்​தில் உள்ள சிரமங்​கள், சட்ட ரீதி​யான பாது​காப்பு நடவடிக்​கைகள், நீதி​மன்ற தீர்ப்​பு​கள் போன்​றவை இடம்​ பெற்​றுள்​ளன. இந்த மசோ​தாவை ஆணை​யத்​திட​மும், முதல்​வரிட​மும் வழங்​கு​வோம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

இந்​நிகழ்​வில், தமிழ்​நாடு தீண்​டாமை ஒழிப்பு முன்​னணி மாநில பொதுச்​செய​லா​ளர் பி.சுகந்​தி, மாநிலத் தலை​வர் த.செல்​லக்​கண்​ணு, தலித் விடு​தலைக்​கான தேசிய மேடை அகில இந்​திய துணைத் தலை​வர் கே.​சா​முவேல்​ராஜ், துணைச் செய​லா​ளர்​ கே.சு​வாமி​நாதன்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

தமிழக அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து சாதிய படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வைப்போம்: பெ.சண்முகம் உறுதி
மனைவியை கொலை செய்வேன் என வானத்தை நோக்கி சுட்டு மிரட்டிய ராணுவ வீரர்: ஏர்கன், 180 தோட்டாக்கள் பறிமுதல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in