

பெ.சண்முகம்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பி.லட்சுமணன் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
இந்தத் தொகுதியில் ஐந்துமுனைப் போட்டி நிலவி வரும் நிலையில், அவரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பி.சண்முகம் இன்று (29-ம் தேதி) தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.
இவர் தாராபுரம் புதுக்காவல் நிலைய பகுதியில் நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை தாராபுரம் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.