சேலத்தில் 77.07 % வாக்காளர்களிடம் எஸ்ஐஆர் படிவம் திரும்பப் பெறப்பட்டன: அதிகாரிகள் தகவல்

சேலத்தில் 77.07 % வாக்காளர்களிடம் எஸ்ஐஆர் படிவம் திரும்பப் பெறப்பட்டன: அதிகாரிகள் தகவல்
Updated on
2 min read

மேட்டூர்: சேலம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில், 98.72 % வாக்காளர்களுக்கு படிவங்கள் வழங்கிய நிலையில், 77.07 % படிவங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி கடந்த மாதம் 4-ம் தேதி முதல் வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த படிவத்தை நிரப்பிய வாக்காளர்களிடம் இருந்து படிவங்கள் திரும்ப பெறப்பட்டு வருகிறது. குறிப்பாக, அப்பகுதியில் வாக்காளர்களிடம் இருந்தும், வசிக்காதவர்கள் உள்ளிட்ட பூர்த்தி செய்த படிவங்களை மீண்டும் பெறும் பணியில் வாக்கு சாவடி நிலை அலுவலர்கள், வாக்கு சாவடி முகவர்கள், மாநகராட்சி , பேரூராட்சி,  நகராட்சி, கல்வித் துறை ஊழியர்கள், அரசியல் கட்சிகள் என அனைவரும் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, சேலம் மாவட்டத்தை பொறுத்தைவரை, மாநகரில் 3 தொகுதிகளிலும், மாவட்டத்தில் 8 தொகுதிகளில் உள்ளன. இதில் மாநகரில் உள்ள சேலம் மேற்கு தொகுதியில் 98.09 % படிவங்கள் வழங்கிய நிலையில் 66.30 % படிவங்களும் திரும்ப பெறப்பட்டுள்ளன. சேலம் வடக்கு தொகுதியில் 96.18 % படிவங்கள் வழங்கிய நிலையில் 67.63 % படிவங்களும் திரும்ப பெறப்பட்டுள்ளன. சேலம் தெற்கு தொகுதியில் 99.10 % படிவங்கள் வழங்கிய நிலையில் 71.68 % படிவங்களும் திரும்ப பெறப்பட்டுள்ளன.

அதேபோல், மாவட்டத்தில் கெங்கவல்லி தொகுதியில் 99.25 % படிவங்கள் வழங்கிய நிலையில் 81.42 % படிவங்களும் திரும்ப பெறப்பட்டுள்ளன. ஆத்தூர் தொகுதியில் 98.23 % படிவங்கள் வழங்கிய நிலையில் 81.31 % படிவங்களும் திரும்ப பெறப்பட்டுள்ளன. ஏற்காடு தொகுதியில் 99.55 % படிவங்கள் வழங்கிய நிலையில் 78.77 % படிவங்களும் திரும்ப பெறப்பட்டுள்ளன. ஓமலூர் தொகுதியில் 99.04 % படிவங்கள் வழங்கிய நிலையில் 82.67 % படிவங்களும் திரும்ப பெறப்பட்டுள்ளன.

மேட்டூர் தொகுதியில் 98.94 % படிவங்கள் வழங்கிய நிலையில் 74.21 % படிவங்களும் திரும்ப பெறப்பட்டுள்ளன. எடப்பாடி தொகுதியில் 99.79 % படிவங்கள் வழங்கிய நிலையில் 81.13 % படிவங்களும் திரும்ப பெறப்பட்டுள்ளன.  சங்ககிரி தொகுதியில் 98.10 % படிவங்கள் வழங்கிய நிலையில் 81.30 % படிவங்களும் திரும்ப பெறப்பட்டுள்ளன. வீரபாண்டி தொகுதியில் 99.66 % படிவங்கள் வழங்கிய நிலையில் 82.64 % படிவங்களும் திரும்ப பெறப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டத்தில் ஒட்டு மொத்தமாக 30.30 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில், 29.91 லட்சம் வாக்காளர்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 23.35 லட்சம் வாக்காளர்களிரிடம் இருந்து படிவங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன. குறிப்பாக, 98.72 % வாக்காளர்களுக்கு படிவங்கள் வழங்கிய நிலையில், 77.07 % படிவங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன. தற்போது வரை, மாவட்டத்தில் 69 ஆயிரம் வாக்காளர்கள் இறந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

வாக்காளர்கள் இறப்பு, நிரந்தர குடிபெயர்வு, நிரந்தர முகவரி மாற்றம் என 4.97 % பேர் கண்டறியப்பட்டுள்ளது. வாக்காளர்கள் இறப்பு, நிரந்தர குடிபெயர்வு, நிரந்தர முகவரி மாற்றம் தவிர்த்த இதர வாக்காளர்கள் கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்து உடடினயாக வழங்க வேண்டும். படிவங்களை வழங்கியவர்களின் பெயர்கள் மட்டுமே வரைவு வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெறும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சேலத்தில் 77.07 % வாக்காளர்களிடம் எஸ்ஐஆர் படிவம் திரும்பப் பெறப்பட்டன: அதிகாரிகள் தகவல்
எஸ்ஐஆர் பணியை முறையாக நடத்தாத ஆட்சியர் மீது நடவடிக்கை தேவை: அமைச்சர் ஐ.பெரியசாமி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in