பாலியல் புகார்: பழிவாங்கப்பட்ட ரயில்வே பெண் ஊழியருக்கு ஓய்வூதிய பலன் வழங்க உத்தரவு

பாலியல் புகார்: பழிவாங்கப்பட்ட ரயில்வே பெண் ஊழியருக்கு ஓய்வூதிய பலன் வழங்க உத்தரவு

Published on

சென்னை: ​பாலியல் தொல்லை குறித்து புகார் அளித்​த​தால் அதி​காரி​களால் பழி​வாங்​கப்​பட்ட ஓய்​வு​பெற்ற கூட்​டுறவு சங்க பெண் ஊழியருக்​கான பணப்​பலன்​களை நிலு​வை​யின்றி 8 வார காலத்​துக்​குள் வழங்க ரயில்வே தொழிலா​ளர்​கள் கூட்​டுறவு கடன் சங்​கத்​துக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

சென்​னை​யில் உள்ள ரயில்வே தொழிலா​ளர்​கள் கூட்​டுறவு கடன் சங்​கத்​தில் பணி​யாற்​றிய பெண் ஊழியருக்கு அதே சங்​கத்​தில் உதவிச் செய​லா​ள​ராக பணி​யாற்​றிய நாககேசரி என்​பவர் பாலியல் ரீதி​யாக தொல்லை கொடுத்​த​தாக குற்​றச்​சாட்டு எழுந்தது. அதையடுத்து அவருக்கு எதி​ராக அந்​தப்​பெண் ஊழியர் கடந்த 2001 ஏப்​ரலில் சங்​கத்​தின் தலை​வரிடம் புகார் அளித்​தார். அதன்​பேரில் நாககேசரிக்கு எதி​ராக நடவடிக்கை எடுத்த சங்​கத்தலை​வர், அவரது பிரி​வில் பெண்ஊழியர்​களை நியமிக்​கக் கூடாதுஎன உத்​தர​விட்​டார்.

ஆனால் அதே ஆண்டு ஜூலை​யில் மீண்​டும் அதி​காரத்​துக்கு வந்த நாககேசரி, மீண்​டும் அந்தபெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை அளித்​துள்​ளார். இதையடுத்து தேசிய மற்​றும் மாநில மனித உரிமை​கள் ஆணை​யம், மகளிர் ஆணை​யம், முதல்​வரின் தனிப்​பிரிவு, தெற்கு ரயில்வே பொது மேலாளர், காவல் ஆணை​யர் உள்​ளிட்​டோருக்கு பெண் ஊழியர் புகார் அளித்தார்.

இதன்​தொடர்ச்​சி​யாக கடந்த 2004-ம் ஆண்டு பெண் ஊழியர் இடைநீக்​கம் செய்​யப்​பட்​டார். இந்த விவ​காரம் தொடர்​பாக விசாரித்த அப்​போதைய தேசிய மகளிர் ஆணைய உறுப்​பின​ரான தற்​போதைய மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன், ஓய்​வு​பெற்ற உயர் நீதி​மன்ற நீதிபதி கே.சம்​பத் உள்​ளிட்​டோர் அடங்​கிய குழு, பாலியல் தொல்லை அளித்​த​தாக குற்​றம்​சாட்​டப்​பட்ட உதவிச் செய​லா​ள​ரான நாககேசரியை இடைநீக்​கம் செய்​ய​வும், பெண் ஊழியரை மீண்​டும் பணி​யமர்த்​த​வும் உத்​தர​விட்​டது.

இந்​நிலை​யில், கடந்த 2023-ல் அந்த பெண் ஊழியர் வயது முதிர்​வின் காரண​மாக ஓய்​வு​பெற்ற நிலை​யில், அவரை ஓய்​வு​பெற அனு​ம​திக்​காமல் அவருக்கு எதி​ரான விசா​ரணை தொடர்ந்து நடைபெற்று வரு​கிறது. இதனால் தனக்கு பணி ஓய்​வும் ஒய்​வூ​தியபலன்​களை​யும் இடைநீக்க காலத்​தில் இருந்து தற்போது வரையி​லான நிலுவை பணப்​பலன்​களை​யும் வழங்​கக்​கோரி பெண் ஊழியர் சென்னைஉயர் நீதி​மன்றத்​தில் வழக்கு தொடர்ந்​தார்.

இந்த வழக்கை விசா​ரித்த நீதிபதி டி.பரத சக்​ர​வர்த்தி பிறப்பித்த உத்​தர​வில் கூறியிருப்பதாவது: பணி​யிடங்​களில் பெண்​களுக்கு எந்​தவொரு பாலியல் அத்​து​மீறல்​களும் நேராமல் உறுதி செய்ய வேண்​டியது நிர்வாகத்​தின் கடமை. ஆனால் பாலியல் தொல்லை அளித்த நபர் மீது நடவடிக்​கை​யும் எடுக்​காமல் அதி​காரி​கள் ஒன்​றுகூடி பாதிக்​கப்​பட்ட பெண்ணை இடைநீக்​கம் செய்து பழி​வாங்​கி​யுள்​ளனர்.

பாலியல் குற்​றச்​சாட்​டுக்​காக நாககேசரிக்கு சிறை தண்​டனை விதித்​த​பிறகும்​கூட அவர் மீது துறைரீ​தி​யாக எந்​தவொரு நடவடிக்​கை​யும் அதிகாரிகள் எடுக்​க​

வில்​லை. இந்​நிலை​யில் நாககேசரி​யும் இறந்​து​விட்​டார். பாதிக்​கப்​பட்ட பெண் ஊழியர் கடந்த 2023-ம் ஆண்டு ஓய்வு பெற்​றபின்​னரும், அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை இன்​னும் முடிய​வில்​லை.

அந்த பெண் ஊழியர் ஓய்வு பெறதகு​தி​யுடைய​வர் என்​ப​தால் அவருக்​கான ஓய்​வூ​தி​யம் உள்​ளிட்ட அனைத்து நிலுவை பணப்​பலன்​களை​யும் 8 வாரத்துக்​குள்வழங்க வேண்​டும். காலம் தாழ்த்​தி​னால் 9 சதவீத வட்​டி​யுடன் வழங்க வேண்​டும்​. இவ்​வாறு உத்​தர​விட்​டு வழக்​கை முடித்​து வைத்​தார்​.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in