நீதிபதி குறித்து அவதூறு: வழக்கறிஞர் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு

நீதிபதி குறித்து அவதூறு: வழக்கறிஞர் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு
Updated on
1 min read

மதுரை: நீதிபதி குறித்து அவதூறாகப் பேசி​ய​தாக வழக்​கறிஞர் மீது நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்கை எடுக்​கக் கோரிய வழக்​கில், வழக்​கறிஞரின் அவதூறுப் பேச்சு விவரங்​கள் மற்​றும் ஆவணங்​களை தாக்​கல் செய்​யு​மாறு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

உயர் நீதி​மன்ற நீதிபதி குறித்து அவதூறாகப் பேசி​ய​தாக வழக்​கறிஞர் வாஞ்​சி​நாதன் மீது உயர் நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து நீதி​மன்ற அவம​திப்பு வழக்​குப் பதிவு செய்​துள்​ளது. இது தொடர்​பாக, உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு பதி​வாளர் மனு தாக்​கல் செய்​துள்​ளார்.

இந்த மனு, நீதிபதிகள் ஜி.ஜெயச்​சந்​திரன், கே.கே.​ராமகிருஷ்ணன் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது நீதிபதிகள், “நீதி வழங்​கு​வதற்கு இடையூறாக இருக்​கும் வகை​யில் வழக்​கறிஞரின் செயல்​பாடு என்​ன?” என்று கேள்வி எழுப்​பினர்.

அதற்கு பதி​வாளர் தரப்​பில், “நீ​திபதி சாதி அடிப்​படை​யில் ஒரு தலைப்​பட்​ச​மாக தீர்ப்பு வழங்​கு​வ​தாக வாஞ்​சி​நாதன் பொது​வெளி​யில் பேசி​யிருக்​கிறார்” என்று தெரிவிக்​கப்​பட்​டது.

பின்​னர் நீதிப​தி​கள் உத்​தர​விட்​ட​தாவது: வழக்​கறிஞர் மீதான குற்​றச்​சாட்டு நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்​கைக்கு வழி​வகுக்​கு​மா? சர்ச்​சைக்​குரிய வகை​யில் அவர் பேசி​யது என்ன? அவரது பேச்சு சமூக வலை​தளங்​களில் பரவியதும், அவருக்கு நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டுள்​ளது.

அது தொடர்​பாக நீதி​மன்ற அவம​திப்பு வழக்​கில் அவர் என்ன பேசி​னார் என்​பதை தெரிந்​து​கொள்ள வேண்​டிய அவசி​யம் உள்​ளது. அதன் பிறகே உரிய முடி​வெடுக்க முடி​யும். அவரின் அவதூறு தனி​நபருக்கு எதி​ரானதா அல்​லது நீதித்​துறைக்கு எதி​ரானதா என்​பதை அறிய முடி​யும்.

அதன் பிறகே குற்​ற​வியல் நடவடிக்கை எடுக்க முடி​யு​மா? என்​பதை முடிவு செய்ய முடி​யும். நீதிபதிகள் முதலில் இந்​திய குடிமகன்​கள்​தான் என்​பதை அனை​வரும் தெரிந்​து​கொள்ள வேண்​டும்.

அவர்​களது பணி​யின் அடிப்​படை​யில் நீதிபதிகளாக அடை​யாளப்​படுத்​தப்​படு​கின்​றனர். வழக்​கறிஞரின் பேச்சு தொடர்​பான குறிப்​பு​கள் மற்​றும் ஆவணங்​களை மூடி முத்​திரை​யிட்ட உறை​யில் தாக்​கல் செய்ய வேண்​டும்.

அதை ஆய்வு செய்த பிறகு அடுத்​த ​கட்ட நடவடிக்கை எடுக்​கப்​படும்​. வி​சா​ரணை ​மார்​ச்​ 2-ம்​ தேதிக்​கு தள்​ளிவைக்​கப்​படு​கிறது. இவ்​​வாறு அவர்​கள்​ உத்தர​விட்​டனர்​.

நீதிபதி குறித்து அவதூறு: வழக்கறிஞர் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு
விஐடி துணை தலைவருக்கு கவுரவ டாக்டர் பட்டம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in