

சென்னை: வந்தே பாரத் ரயில்களில் உள்ளூர் உணவுகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பு: வந்தே பாரத் ரயில்களில் உள்ளூர் உணவுகள் வழங்க வேண்டும். இதைத் தொடர்ந்து, படிப்படியாக அனைத்து ரயில்களிலும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும்.
ஐஆர்சிடிசி இணையதளத்தில் ஒரு நாளுக்கு சராசரியாக 1 லட்சம் புதிய கணக்குகள் தொடங்கப்பட்டு வந்தன. போலி அட்டையைக் களையெடுக்கும் நடவடிக்கை காரணமாக, அந்த எண்ணிக்கை 5 ஆயிரமாக குறைந்துள்ளது.3.03 கோடி போலி கணக்குகள் ரத்து செய்யப்பட்டன. சந்தேகத்துக்குரிய 2.70 கோடி கணக்குகள் தற்காலிகமாக நீக்கப்பட்டன.
போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி, முன்பதிவு செய்வதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடரும். மேலும் அனைத்து பயணிகளும் எளிதாக டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான வசதிகளை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.