

மதுரை: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி கொலையில் சாயல் குடியைச் சேர்ந்த தர்மமுனீஸ்வரனுக்கு மே 25-ல் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை உறுதிப்படுத்தக்கோரி தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்ற மதுரைஅமர்வில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் என்.ஆனந்த்வெங்கடேஷ், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது.
மதுரை மத்திய சிறையில் இருந்தபடி தர்மமுனீஸ்வரன் காணொலி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜரானர். அப்போது விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்போவதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை அவருக்கு வழங்க உத்தரவிட்டு விசாரணை ஜூன் 12-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.