அனைத்து தொழிலாளரையும் பிஎஃப் உறுப்பினராக்க உத்தரவு: திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு விபத்தால் ஆட்சியர் நடவடிக்கை

அனைத்து தொழிலாளரையும் பிஎஃப் உறுப்பினராக்க உத்தரவு: திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு விபத்தால் ஆட்சியர் நடவடிக்கை
Updated on
1 min read

சென்னை: ​திருவள்ளூர் கன்​னிகைப்​பேர் பகு​தி​யில் உள்ள தொழிற்​சாலை​யில் அமோனியா வாயு கசிவு விபத்​தால் 18 பேர் உயி​ரிழந்த நிலை​யில், மாவட்​டத்​தில் உள்ள தொழிலா​ளர்​கள் அனை​வரை​யும் பிஃஎப் உறுப்​பினர்​களாக்க வேண்​டும் என்று ஆட்​சி​யர் ச.க​விதா உத்​தர​விட்​டுள்​ளார்.

திரு​வள்​ளூர் மாவட்​டம் கன்​னிகைப்​பேர் பகு​தி​யில் இறால் உள்​ளிட்ட கடல் உணவுப் பொருட்​களைப் பதப்​படுத்தி வெளி​நாடு​களுக்கு ஏற்​றுமதி செய்​யும் தனி​யார் நிறு​வனம் செயல்​பட்டு வந்​தது.

இங்கு கடந்த ஜூன் 21-ம் தேதி அமோனியா வாயு கசிந்​த​தால், தொழிலா​ளர்​களுக்கு மூச்​சுத் திணறல், கண் எரிச்​சல் ஏற்​பட்​டுள்​ளது. இதில் பாதிக்​கப்​பட்ட 83 பேர் பல்​வேறு மருத்​து​வ​மனை​களில் அனு​ம​திக்​கப்​பட்​டனர்.

இதில் உடல்​நலம் பாதிக்​கப்​பட்டு 18 பேர் உயி​ரிழந்​தனர். மற்​றவர்​கள் முழு​மை​யாக குணமடைந்து வீடு திரும்​பினர். இந்த வழக்​கில் 3 பேரை திரு​வள்​ளூர் மாவட்ட போலீ​ஸார் கைது செய்​தனர்.

இந்த விபத்து தொடர்​பாக நாளிதழ்​களில் வெளி​யான செய்​தி​களின் அடிப்​படை​யில் டெல்​லி​யில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்​பா​யத்​தின் முதன்மை அமர்வு தாமாக முன்​வந்து வழக்குப் பதிவு செய்​தது.

அதைத் தொடர்ந்​து, ‘இந்த வழக்​கில் மத்​திய மற்​றும் மாநில மாசுக் கட்​டுப்​பாடு வாரிய உறுப்​பினர் செயலர்​கள், மத்​திய சுற்​றுச்​சூழல் துறை​யின் சென்னை மண்டல அதி​காரி, திரு​வள்​ளூர் மாவட்ட ஆட்​சி​யர் ஆகியோர் பிர​தி​வா​தி​களாக சேர்க்​கப்​படு​கின்​றனர்.

அமோனியா வாயு கசிவு விபத்து தொடர்​பாக அடுத்த விசா​ரணை​யின்​போது இவர்​கள் அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும்’ என்று தீர்ப்​பா​யம் உத்​தர​விட்​டது.

பின்​னர், தேசிய பசுமை தீர்ப்​பா​யத்​தின் சென்​னை​யில் உள்ள தென் மண்டல அமர்​வுக்கு மாற்​றப்​பட்ட இந்த வழக்கு ஆக.31-ம் தேதி விசா​ரணைக்கு வரு​கிறது.

இதற்​கிடையே, விபத்து நிகழ்ந்த நிறு​வனத்​தின் தொழிலா​ளர்​கள் வருங்​கால வைப்பு நிதி (EPF) உறுப்​பின​ராக உள்​ளன​ரா, பிஎஃப் விதி​களின்​படி, விபத்​தில் உயி​ரிழந்த தொழிலா​ளர்​களுக்கு 30 மாத ஊதி​யம் அல்​லது ரூ.7 லட்​சம் வரை காப்​பீட்டுத் தொகை வழங்​கப்​பட்​டதா என்​பது குறித்து திரு​வள்​ளூர் மாவட்ட நிர்​வாகத்​திடம் கேட்​ட​போது அவர்​கள் கூறிய​தாவது:

சம்​பந்​தப்​பட்ட நிறு​வனத்​துக்கு ஒப்​பந்​த​தா​ரர் மூல​மாக தொழிலா​ளர்​கள் அனுப்​பப்​பட்​டுள்​ளனர். இவர்​கள் சில மாதங்​கள் தங்கி பணிபுரியக் கூடிய​வர்​கள். இவர்​கள் அந்த நிறு​வனத்​தின் நிரந்தர தொழிலா​ளர்​கள் இல்​லை. வருங்​கால வைப்பு நிதி உறுப்​பினர்​களாக​வும் அவர்​களை சேர்க்​க​வில்​லை. பிஎஃப் நிறு​வனத்​தினரும் தொழிற்​சாலைக்கு வந்து ஆய்வு செய்​தனர்.

இந்த நிலை​யில், திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் உள்ள அனைத்து நிறு​வனங்​கள் மற்​றும் தொழிற்​சாலைகளி​லும் ஆட்​களை கொண்டு வந்து சேர்க்​கும் ஒப்​பந்​த​தா​ரர்​கள் 100 சதவீதம் பதிவு பெற்​றவர்​களாக இருக்க வேண்​டும்.

அனைத்து தொழிலா​ளர்​களை​யும் பிஃஎப் உறுப்​பினர்​களாக்க வேண்​டும் என்று மாவட்ட ஆட்​சி​யர் ச.க​விதா உத்​தர​விட்​டுள்​ளார்​. இவ்​வாறு அதி​காரி​கள்​ தெரிவித்​தனர்​.

அனைத்து தொழிலாளரையும் பிஎஃப் உறுப்பினராக்க உத்தரவு: திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு விபத்தால் ஆட்சியர் நடவடிக்கை
சென்னை, புறநகரில் மழை: மோசமான வானிலையால் அமித் ஷா ஹெலிகாப்டர் தரையிறங்குவதில் சிக்கல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in