

சென்னை: சென்னை, புறநகர் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தாம்பரம், மீனம்பாக்கம், பல்லாவரம், புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து, குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தியது.
மெரினாவில் வார விடுறையை கழிக்க வந்த மக்கள், குழந்தைகளுடன் மழையில் நனைந்து சிரமத்துக்குள்ளாயினர். இதனிடையே புதுச்சேரியில் நேற்று நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஹெலிகாப்டர் மூலமாக சென்னை விமான நிலையம் நோக்கி நேற்று மாலை வந்து கொண்டிருந்தார்.
அப்போது கனமழை பெய்ததால், அமித் ஷாவின் ஹெலிகாப்டர் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் அவசரமாக தாம்பரம் விமானப்படை தளத்தில் பாதுகாப்பாக தரையிறங்கி அங்கிருந்து காரில் சென்னை விமான நிலையம் வந்து, தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.