சைவம், வைணவம், பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு: பொன்முடியை கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவு

சைவம், வைணவம், பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு: பொன்முடியை கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவு
Updated on
1 min read

சென்னை: சைவம், வைணவம் மற்​றும் பெண்​கள் குறித்து சர்ச்​சைக்​குரிய வகை​யில் பேசி​ய​தாகத் தொடரப்​பட்​டுள்ள வழக்​கில், முன்​னாள் திமுக அமைச்​சர் பொன்​முடியை கைது செய்து ஆஜர்​படுத்​தும் வகை​யில் பிடி​வாரண்ட் பிறப்​பித்து ஜார்ஜ் டவுன் சிறப்பு நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

சென்​னை​யில் கடந்​தாண்டு நிகழ்ச்சி ஒன்​றில் பங்​கேற்ற முன்​னாள் திமுக அமைச்​சர் க.பொன்​முடி சைவம், வைணவம் மற்​றும் பெண்​கள் குறித்து சர்ச்​சைக்​குரிய வகை​யில் பேசி​ய​தாக மாநக​ராட்சி கவுன்​சிலர் உமா ஆனந்​தன் தனி​நபர் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

இந்த வழக்கை விசா​ரணைக்கு ஏற்று ஜார்ஜ் டவுன் சிறப்பு நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவை ரத்து செய்​யக் கோரி பொன்​முடி தாக்​கல் செய்​திருந்த மனுவை தள்​ளு​படி செய்த உயர் நீதி​மன்​றம், இந்த வழக்கை 6 மாதங்​களுக்​குள் விசா​ரித்து முடிக்க வேண்​டும் என ஜார்ஜ் டவுன் நீதி​மன்​றத்​துக்கு உத்​தர​விட்​டுள்​ளது.

இந்​நிலை​யில் பொன்​முடிக்கு எதி​ராக உமா ஆனந்​தன் தொடர்ந்த வழக்கு ஜார்ஜ் டவுன் சிறப்பு நீதி​மன்​றத்​தில் நீதிபதி சி.சுந்​தர​பாண்​டியன் முன்​பாக நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது பொன்முடி தரப்​பில் நேரில் ஆஜராவ​தில் இருந்து விலக்கு அளிக்​கக் கோரி மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது.

அதற்கு உமா ஆனந்​தன் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் எஸ்​.மகேஷ் கடும் ஆட்​சேபம் தெரி​வித்​தார். மேலும் அவர், ‘‘எதிர்​மனு​தா​ர​ரான பொன்​முடி ஒரு விசா​ரணைக்​குக்​கூட நேரில் ஆஜரா​காமல் வழக்கை இழுத்​தடித்து வரு​கிறார்.

இந்த வழக்கு விசா​ரணையை 6 மாதங்​களுக்​குள் முடிக்க வேண்​டுமென உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. எனவே பொன்​முடி நேரில் ஆஜராவ​தில் இருந்து விலக்கு அளிக்​கக்​கூ​டாது’’ என வாதிட்​டார்.

அதையடுத்​து, நேரில் ஆஜராவ​தில் இருந்து விலக்கு அளிக்​கக் கோரி பொன்​முடி தரப்​பில் தாக்​கல் செய்​யப்​பட்ட மனுவை தள்​ளு​படி செய்​து, பொன்​முடியை கைது செய்து ஆஜர்​படுத்​தும் வகை​யில் அவருக்கு பிடி​வாரன்ட் பிறப்​பித்த நீதிப​தி, வி​சா​ரணை​யை செப்​.2-ம்​ தேதிக்​கு தள்​ளி​வைத்​துள்​ளார்​.

சைவம், வைணவம், பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு: பொன்முடியை கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவு
பேரவையில் முதல்வர் பதில் சொல்லட்டும்: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in