சிஜேபி நிர்வாகி சவுரவ் தாஸ் பூர்வீகம் குறித்து விசாரணை நடத்த கோரி வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

சிஜேபி நிர்வாகி சவுரவ் தாஸ் பூர்வீகம் குறித்து விசாரணை நடத்த கோரி வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
Updated on: 
1 min read

சென்னை: கரப்​பான் பூச்சி ஜனதா கட்​சி​யின் தேசிய இணை ஒருங்​கிணைப்​பாளர் சவுரவ் தாஸ், நேபாளத்தை பூர்​வீக​மாகக் கொண்​ட​வரா என்​பது குறித்து விரிவான விசா​ரணை நடத்த கோரி தொடரப்​பட்ட வழக்​கில், மத்​திய அரசு 6 வாரங்​களில் பதிலளிக்க சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

காஞ்​சிபுரம் மாவட்​டத்​தைச் சேர்ந்த கணேஷ்குமார் என்​பவர், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த பொதுநல மனுவில் கூறி​யிருப்​ப​தாவது: கரப்​பான் பூச்சி ஜனதா கட்​சி​யின் தேசிய இணை ஒருங்​கிணைப்​பாளர் யோகேஷ் சர்மா என்ற சவுரவ் தாஸ் பேச்சு மற்​றும் கருத்து சுதந்​திரம் என்ற பெயரில் நீதித்​துறை​யின் செயல்​பாடுகள் குறித்​தும், குறிப்​பாக உச்ச நீதி​மன்ற நீதிப​தி​களுக்கு எதிராக மிரட்​டல் விடுக்​கும் வகை​யிலும் தொடர்ந்து சமூக வலை​தளங்​களில் அவதூறு பரப்பி வரு​கிறார்.

இது இந்​திய அரசி​யலமைப்பு சட்​டத்​தையே அவ​மதிக்​கும் செயல். சவுரவ் தாஸின் வம்​சாவளி நேபாளத்​தைச் சேர்ந்​தவர்​கள் எனக் கூறப்​படுவ தால் அவர் மற்​றும் அவரது தாய் சீமா சேத்ரி, அவரது தந்தை பிஜய் சர்மா ஆகியோரது குடும்ப பின்​னணி குறித்​தும், அவர்​கள் அனைவரும் உண்​மையில் இந்​தி​யர்​களா என்​பது குறித்​தும் விரிவாக விசா​ரணை நடத்த மத்​திய அரசுக்கு உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு அவர் கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கை விசா​ரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்​மாதி​காரி மற்​றும் நீதிபதி ஜி. அருள்​முருகன் ஆகியோர் அடங்​கிய அமர்வு, மனுதா​ரரின் குற்​றச்​சாட்டு குறித்து மத்​திய அரசு 6 வார காலத்​துக்​குள் பதிலளிக்க உத்​தர​விட்டு விசா​ரணை​யைத் தள்ளி வைத்​தனர்.

சிஜேபி நிர்வாகி சவுரவ் தாஸ் பூர்வீகம் குறித்து விசாரணை நடத்த கோரி வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
காலி பாட்டில் திட்டத்தில் பெறப்படும் தொகையை அரசுக்கு வரவு வைக்கவே மதுபானங்களின் எம்ஆர்பி விலை உயர்வு: அமைச்சர் விளக்கம்

X