காலி பாட்டில் திட்டத்தில் பெறப்படும் தொகையை அரசுக்கு வரவு வைக்கவே மதுபானங்களின் எம்ஆர்பி விலை உயர்வு: அமைச்சர் விளக்கம்

காலி பாட்டில் திட்டத்தில் பெறப்படும் தொகையை அரசுக்கு வரவு வைக்கவே மதுபானங்களின் எம்ஆர்பி விலை உயர்வு: அமைச்சர் விளக்கம்
Updated on: 
1 min read

சென்னை: ​காலி மது​பாட்​டில் திரும்​பப்​பெறும் திட்​டத்​தில் பெறப்​படும் ரூ.10 தனி நபர்​களுக்கு செல்​வதைத் தடுத்து அரசுக்கு வரவைக்​கவே எம்​ஆர்பி விலை​யில் அதி​காரப்​பூர்​வ​மாக ரூ.10 உயர்த்​தப்​பட்​டுள்​ள​தாக மது​விலக்கு மற்​றும் ஆயத்​தீர்​வைத் துறை அமைச்​சர் விக்​னேஷ் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக, தலை​மைச் செயல​கத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: டாஸ்​மாக் நிர்​வாகம் மது​பான விலையை ரூ.10 உயர்த்​தி​யுள்​ள​தாக சில செய்தி நிறு​வனங்​களும், அரசி​யல் கட்​சித் தலை​வர்​களும் கருத்து சொன்​னது வருத்​த​மாக இருந்​தது.

இதற்​கு​முன்பு ஒரு மது பாட்​டிலின் விலை ரூ.140 என்​றால், அதற்கு ரூ.10 அதி​க​மாகப் பெறப்​பட்​டு, மது பாட்​டிலை திரும்​பக் கொடுத்​தால் ரூ.10 தரப்​படும் என வசூலித்​தார்​கள். அரசு கணக்​கில் வரா​மல் பணம் வசூலிப்​பது தவறு.

எந்​தப் பணமாக இருந்​தா​லும் வரவு செலவு அரசு மூல​மாகத்​தான் இருக்க வேண்​டும், தனி​நபர் கைகளுக்​குச் செல்​லக்​கூ​டாது என்ற நோக்​கில் இப்​போது ரூ.10, சுற்​றுச்​சூழல் செஸ் ஆக போடப்​பட்​டுள்​ளது.

இனி ஒரு பாட்​டிலுக்கு ரூ.150 என்​றால் ரூ.150-ம் கணக்​கில் இருக்​கும். பாட்​டிலை திருப்பி கொடுத்​தால் ரூ.10 சம்​பந்​தப்​பட்​ட​வர்​களின் கைகளில் கொடுக்​கப்​படும்.

கடந்த திமுக ஆட்​சி​யில் 99 சதவீதம் மது பாட்​டில்​கள் திரும்ப வந்​த​தாகச் சொன்​னார்​கள். இதில் சந்​தேகம் ஏற்​பட்​ட​தால் 3 கடைகளில் சோதனை செய்​தோம். அதில் 40 சதவீதம் பாட்​டில்​கள் திரும்ப வரவில்​லை.

அந்​தப் பாட்​டில்​களுக்​காக வசூலிக்​கப்​பட்ட ஆண்​டுக்கு ரூ.1,200 முதல் ரூ.1,600 கோடி எங்கே சென்​றது என்று தெரிய​வில்​லை. இது அரசுக்கு வரவேண்டும் என்​று​தான் புதிய முறையைக் கொண்டு வந்​துள்​ளோம்.

ஒரு மாவட்​டத்​தில் வாங்கிய மது பாட்​டிலை மற்​றொரு மாவட்​டத்​தில் திருப்​பிக் கொடுத்​தா​லும் ரூ.10 வாங்​கிக் கொள்​ளலாம் என்று நடை​முறையைக் கொண்​டு​வர உள்​ளோம்​ என்றார். இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

காலி பாட்டில் திட்டத்தில் பெறப்படும் தொகையை அரசுக்கு வரவு வைக்கவே மதுபானங்களின் எம்ஆர்பி விலை உயர்வு: அமைச்சர் விளக்கம்
தவெக ஆட்சி 5 ஆண்டுகளை நிறைவு செய்யும்: அமைச்சர் விஸ்வநாதன் உறுதி

X