

சென்னை: திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோயில் இணை ஆணையராக பணியாற்றி வந்த க.ராமு, இந்து சமய அறநிலையத் துறை சென்னை-1 இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக அப்பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்த பா.விஜயாவின் நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மதுரை மண்டலத்துக்கு பணியிட நியமனம் வழங்கப்பட்டிருந்த கி.ரேணுகாதேவி-யின் அந்த நியமனம் ரத்து செய்யப்பட்டு, அவர் திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோயில் இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரத்துக்கு பணிநியமனம் வழங்கப்பட்டிருந்த தி.அனிதா-வின் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு, அவர் சென்னை மண்டலம்-3 இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை மண்டலம்-3 இணை ஆணையராக முன்னர் நியமிக்கப்பட்டிருந்த க.ரமணியின் நியமனம் ரத்து செய்யப்பட்டு, அவர் இந்து சமய அறநிலையத் துறை தலைமையிடத்தின் சரிபார்ப்புப் பிரிவு இணை ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
சென்னை-1 நியமனம் ரத்து செய்யப்பட்ட பா.விஜயா, திருவண்ணாமலை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தலைமையிட சரிபார்ப்புப் பிரிவு இணை ஆணையராக முன்னர் நியமிக்கப்பட்டிருந்த சி.குமரதுரை-யின் அந்த நியமனம் ரத்து செய்யப்பட்டு,
அவர் காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பணியிட மாறுதல் பெற்றுள்ள அதிகாரிகள் அனைவரும் உடனடியாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட புதிய பொறுப்புகளில் இணைந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.