சென்னை, திருச்சி, கோவை, நீலகிரிக்கு ஆரஞ்ச் அலர்ட்: 34 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

சென்னை, திருச்சி, கோவை, நீலகிரிக்கு ஆரஞ்ச் அலர்ட்: 34 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
Updated on: 
3 min read

சென்னை: தமிழகத்​தில் சென்னை உட்பட 4 மாவட்​டங்​களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதர 34 மாவட்​டங்​களில் கனமழை​ பெய்​யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது.

தமிழகத்​தில் சென்னையில் நேற்று முன்​தினம் பலத்த மழை பெய்​தது. மேலும் ‘ரெட் அலர்ட் ’ விடுக்கப்பட்டது. பின்னர் அந்த எச்சரிக்கையைச் சென்னை

வானிலை மையம் இரவு வாபஸ் பெற்றது. இந்​நிலை​யில், சென்னை உட்பட 4 மாவட்​டங்​களுக்கு ஆரஞ்ச் அலர்ட் மற்​றும் 34 மாவட்​டங்​களில் இன்று கனமழை​யும் பெய்​யும் என்று எச்​சரிக்கை விடுக்​கப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: மத்​திய மேற்கு மற்​றும் அதை ஒட்​டிய தெற்கு ஆந்​திர பகு​தி​களில், மேல் வளிமண்டல சுழற்சி நில​வு​கிறது.

அதில் இருந்து தமிழகக் கடலோரம் வரை வடமேற்கு வங்​கக்​கடல் வழி​யாகச் சுமார் 1.5 கி.மீ. உயரத்​தில் ஒரு காற்​றழுத்த தாழ்வு பாதை நில​வு​கிறது. இதன் காரண​மாக தமிழகத்​தில் இன்று (அக்​.19) சென்​னை, திருச்​சி, கோவை, நீல​கிரி மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் இடி, மின்​னல் மற்​றும் பலத்த காற்​றுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்​யக் கூடும்.

மேலும் தரு​மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திரு​வள்​ளூர், திருப்​பூர், திண்​டுக்​கல், தேனி, விருதுநகர், தென்​காசி, திருநெல்​வேலி, கன்​னி​யாகுமரி, தூத்​துக்​குடி, ராம​நாத​புரம், மதுரை, சிவகங்​கை, புதுக்​கோட்​டை, தஞ்​சாவூர், திரு​வாரூர், நாகப்​பட்​டினம், மயி​லாடு​துறை, கடலூர், பெரம்​பலூர், அரியலூர், விழுப்​புரம், செங்​கல்​பட்​டு, காஞ்​சிபுரம், திரு​வள்​ளூர், வேலூர், ராணிப்​பேட்​டை, திரு​வண்​ணா​மலை, கள்​ளக்​குறிச்​சி, திருப்​பத்​தூர், ஈரோடு, நாமக்​கல் ஆகிய 34 மாவட்​டங்​களில் (மஞ்​சள் அலர்ட்) ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களி​லும் இடி, மின்​னல் மற்​றும் பலத்த காற்​றுடன் கூடிய கனமழை பெய்​யக் கூடும்.

நாளை 20-ம் தேதி தேனி, திருநெல்​வேலி, மதுரை மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் இடி, மின்​னல், பலத்த காற்​றுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்​யக் கூடும். கோவை, நீல​கிரி, ஈரோடு, திருப்​பூர், திண்​டுக்​கல், சேலம், தரு​மபுரி, கிருஷ்ணகிரி, திருப்​பத்​தூர், வேலூர், ராணிப்​பேட்​டை, திரு​வள்​ளூர், சென்​னை, செங்​கல்​பட்​டு, காஞ்​சிபுரம், திரு​வண்​ணா​மலை, விழுப்​புரம், கள்​ளக்​குறிச்​சி, கடலூர், கரூர், பெரம்​பலூர், நாமக்​கல், திருச்​சி, புதுக்​கோட்​டை, தஞ்​சாவூர், மயி​லாடு​துறை, திரு​வாரூர், நாகப்​பட்​டினம், சிவகங்​கை, ராம​நாத​புரம், விருதுநகர், தென்​காசி, தூத்​துக்​குடி, கன்​னி​யாகுமரி, அரியலூர் மாவட்​டங்​களில் கனமழை பெய்​யக் கூடும்.

சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் பொது​வாக மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் ஒருசில பகு​தி​களில் இடி, மின்​னலுடன் கூடிய கன மழை​யும், இடை இடையே ஓரிரு முறை மிக கனமழை​யும் பெய்ய வாய்ப்​புள்​ளது.

தமிழகத்​தில் நேற்று காலை 8.30 மணி​யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்​தில் பதி​வான மழை அளவு​களின்​படி அதி​கபட்​ச​மாக சென்னை பாரி முனை​யில் 36 செ.மீ. கத்​தி​வாக்​கத்​தில் 34 செ.மீ. சென்னை சென்ட்​ரலில் 27 செ.மீ. திரு​வொற்​றியூர், எண்​ணூரில் தலா 22 செ.மீ. எம்​ஜிஆர் நகரில் 19 செ.மீ. தண்​டை​யார்​பேட்​டை, பெரம்​பூரில் தலா 18 செ.மீ. வடபழனி, மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம், நுங்​கம்​பாக்​கத்​தில்​ 16 செ.மீ. மழை பதி​வாகி​யுள்​ளது. இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில்​ கூறப்​பட்​டுள்ளது.

மழை பெய்​யும் நேரத்​தி​லும் தேங்கி இருக்​கும் நீருக்கு அரு​கிலும் பொது​மக்​கள் செல்​வதைத் தவிர்க்க வேண்​டும். வெள்​ளம் தேங்​கி​யுள்ள இடங்​களில் குழந்​தைகள் செல்​லாமல் பார்த்​துக் கொள்ள வேண்​டும். சென்னையில் உள்ள 15 மண்​டலங்​களில் நியமிக்​கப்​பட்​டுள்ள கண்​காணிப்பு அலு​வலர்​கள், பொறுப்பு அமைச்​சர்​கள் நடவடிக்கை எடுத்து வரு​கின்​றனர். 36 செ.மீ. மழை பெய்​தும்​கூட எங்​கும் மழைநீர் தேங்​காத அளவுக்​குத் தமிழக அரசு பணி​யாற்​றி​யுள்​ளது. சென்​னை​யில் தேவை​யான அளவு நிவாரண மு​காம்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. இவ்​வாறு அமைச்​சர் செங்​கோட்​டையன்​ கூறி​னார்​.

விமான சேவை​ பாதிப்பு: சென்​னை, புறநகர் பகு​தி​களில் நேற்று முன்​தினம் மாலை தொடங்​கிய கனமழை இரவு முழு​வதும் பெய்​தது. இதனால், விமான சேவை​கள் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டன. சென்​னை​யில் வந்து தரை​யிறங்க வேண்​டிய 10-க்​கும் மேற்​பட்ட உள்​நாட்டு விமானங்​கள் நீண்ட நேரம் தரை​யிறங்க முடி​யாமல் வானில் வட்​டமடித்​த​படி இருந்​தன. சிறிது மழை குறைந்​ததும், வானில் வட்​டமடித்து பறந்து கொண்​டிருந்த விமானங்​கள், ஒன்​றன்​பின் ஒன்​றாக சென்​னை​யில் தரை​யிறங்​கின.

முன்​ன​தாக, கொல்​கத்​தா​வில் இருந்து 184 பயணி​களு​டன், சென்னை வந்த இண்​டிகோ ஏர்​லைன்ஸ் விமானம், சென்​னை​யில் தரை​யிறங்க முடி​யாமல் ஹைத​ரா​பாத்​துக்கு திருப்பி அனுப்பி வைக்​கப்​பட்​டது. அதே​போல், சென்​னை​யில் இருந்து புறப்பட வேண்​டிய மதுரை, கொச்​சி, மும்​பை, பெங்​களூரு, புனே, டெல்லி உள்​ளிட்ட உள்​நாட்டு விமானங்​கள் மற்​றும் சிங்​கப்​பூர், கோலாலம்​பூர், இலங்​கை, ஃபி​ராங்க்​பர்ட், அபு​தாபி உள்​ளிட்ட சர்​வ​தேச விமானங்​கள் சுமார் ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை கால​தாமத​மாகப் புறப்​பட்​டன.

சென்னை விமான நிலை​யத்​தில் பலத்த மழை காரண​மாக ஏரோபிரிட்ஜ் வசதி இல்​லாமல் திறந்​தவெளி பகு​தி​யில் விமானங்​கள் நிறுத்​தப்​பட்டு பயணி​கள் இறக்​கி​விடப்​பட்​டனர். இதனால், பிக்​-அப் வாக​னங்​களில் ஏறு​வதற்கு பயணி​கள்​ பெரும்​ சிரமத்​துக்​கு ஆளாகினர்​.

செல்போன்களில் எச்சரிக்கை: ‘செல் பிராட்​காஸ்​டிங் சிஸ்​டம்’ என்ற தொழில்​நுட்​பம் மூலம் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணை​யம் அவ்​வப்​போது பொது​மக்​களுக்கு எச்​சரிக்கை விடுக்​கிறது. இந்நிலையில் தமிழ்​நாடு பேரிடர் மேலாண்மை ஆணை​யம் அனுப்பிய ஒரு எச்​சரிக்​கையை, நேற்று பிற்​பகல் சுமார் 2 மணி அளவில் சென்னை மாநகர் மற்​றும் புறநகர் பகு​தி​களில் உள்ள அனைத்து செல்​போன் எண்​களுக்​கும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணை​யம் எச்சரிக்கை ஒலி​யுடன் தகவல் அனுப்பியது. அதில் “சென்​னை​யில் இன்று அதி​க​னமழை பெய்ய வாய்ப்​புள்​ளது. பொது​மக்​கள் பாது​காப்​பாக இருக்​க​வும். அதி​காரப்​பூர்வ வானிலை அறி​விப்​பு​கள் மற்​றும் பாது​காப்பு வழி​காட்​டு​தல்​களைப் பின்பற்​ற​வும்” என்று எச்​சரிக்​கப்​பட்​டது.

சென்னை, திருச்சி, கோவை, நீலகிரிக்கு ஆரஞ்ச் அலர்ட்: 34 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
நடிகர் டைகர் ஷெராஃப் காரின் மீது துப்பாக்கிச் சூடு: லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in