

தேர்தல் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் முடிவெடுப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவதாலும், தனது எம்.பி. பதவியை தக்க வைப்பதற்காகவும் தர்மர், அதிமுகவில் இணைந்ததாக அவரது ஆதரவாளர்கள் கூறு கின்றனர்.
அதிமுகவை சேர்ந்த தர்மர் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், அய்யப்பன் ஆகியோர், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களாக இருந்து. அதிமுக தொண்டர்கள் மீட்புக் குழு நிர்வாகிகளாக செயல் பட்டனர். சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஓபிஎஸ் சரியான முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகக் கூறப் படுகிறது. எனவே. எம்எல்ஏ. க்களான வைத்திலிங்கம். மனோஜ் பாண்டியன் ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்தனர்.
அதிமுகவில் ஓபிஎஸ் ஆதர வாளர் ஆர்.தர்மரும், பழனி சாமியின் ஆதரவாளரான சி.வி.சண்முகமும் 2022-ல் மாநிலங்களவை எம்.பி.யாக நியமிக்கப்பட்டனர். அதை யடுத்து உட்கட்சி பிரச்சினையில், ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னரும், அவரது ஆதரவாளராக தர்மர் தொடர்ந்து செயல்பட்டார்.
இருப்பினும், தர்மர் கட்சியிலிருந்து நீக்கப்படாமல் அதிமுக எம். பி. யாக தொடர்ந்தார். இந்நிலையில் 2028 ஜூன் வரை எம்.பி. பதவி இருப்பதால், தர்மர் அப்பதவியை தக்க வைக்க பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்துவிட்டார் என, அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஓபிஎஸ் பின்னால் சென்றால் தனது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் எனக் கருதி, தர்மர் அதிமுகவில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தர்மருக்கு எம்.பி. பதவியை வலியுறுத்தியதால்தான் ஓபிஎஸ் மற்றும் பழனிசாமி இடையே கருத்து வேறுபாடு ஏற் பட்டதாக அப்போது பேசப் பட்டது. ஆனால், தர்மர் இன்று அதிமுகவில் இணைந்து பழனி சாமியுடன் கைகோத்துள்ளார் என, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூறினர்.