தேர்தலில் போட்டியிட ஓபிஎஸ், அவரது மகன் திமுகவில் விருப்ப மனு

தேர்தலில் போட்டியிட ஓபிஎஸ், அவரது மகன் திமுகவில் விருப்ப மனு
Updated on
1 min read

திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் விருப்ப மனு அளித்துள்ளனர்.

திமுக-வில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகம் பிப்ரவரி 20-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. விருப்ப மனு விநியோகம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், 10,500-க்கும் மேற்பட்ட மனுக்கள் விற்பனையாகியுள்ளன. அதில் 70 சதவீத மனுக்கள் சமர்பிக்கப்பட்டுள்ளது. இம்முறை இளைஞரணியைச் சேர்ந்த பலர் விருப்ப மனுக்களை வாங்க ஆர்வம் காட்டினர். இறுதி நாளான நேற்று அமைச்சர்கள் எ.வ.வேலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் விருப்ப மனுக்களை வழங்கினர்.

குறிப்பாக, சமீபத்தில் திமுக-வில் இணைந்த ஓபிஎஸ்ஸின் மகன் ரவீந்திரநாத், தேனி மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், மற்றும் துணை முதல்வர் உதயநிதி போட்டியிட விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கினார். தொடர்ந்து தனக்காகவும் அவர் விருப்ப மனுக்களை அளித்தார்.

அதன்பின் நிருபர்களிடம் பேசிய அவர், ‘‘தேனி மாவட்டம் கம்பம், போடி, ஆண்டிபட்டி ஆகிய தொகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் போட்டியிடுவதற்கான விருப்பம் மனுக்களை அளித்துள்ளேன்.

மேலும், எனது தந்தை பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதியிலும், நான் ஆண்டிபட்டி, போடி தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை அளித்துள்ளேன். வரும் தேர்தலில் வெற்றி பெற்று ஸ்டாலின் மீண்டும் முதல்வராக அரியணையில் அமர்வது உறுதி’’ என்றார்.

தேர்தலில் போட்டியிட ஓபிஎஸ், அவரது மகன் திமுகவில் விருப்ப மனு
தமிழகத்தில் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: முதல்வர் ஸ்டாலின் உறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in