“நிர்வாகிகளுடன் ஆலோசித்து கூட்டணி முடிவை அறிவிக்கிறேன்” - ஓபிஎஸ்

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

Updated on
1 min read

பெரியகுளம்: நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து பிறகு கூட்டணி குறித்து முடிவை அறிவிக்கிறேன் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்காக பல கட்சிகளும் கூட்டணி அமைப்பதில் மும்முரம் காட்டி வருகின்றன. கொள்கை மற்றும் காரசாரமான எதிர்மறை பேச்சுக்களை மறந்தும் கூட்டணியில் ஐக்கியம் ஆகி வருகின்றன. ஆனால் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் தொடர் மவுனம் சாதித்து வருகிறது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் தனித்து விடப்பட்டுள்ளார். தை பிறந்ததும் கூட்டணியை அறிவிப்பேன், நாங்கள் அரசியல் கட்சி அல்ல என்று ஒவ்வொரு நேரத்திலும் வெவ்வேறு பதில்களை கூறி அரசியல் களத்தை குழப்பி வந்தார்.

இந்நிலையில், பெரியகுளத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் செய்தியாளர்கள் முகாமிட்டனர். அங்கிருந்து போடி அலுவலகத்துக்கு செல்ல முயன்றவரை வழிமறித்து கேட்டபோது, நாளை (வியாழன்) நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து பிறகு முடிவை அறிவிக்கிறேன் என்று ஒற்றை வரி பதிலை மட்டும் கூறிவிட்டுச் சென்றார்.

இதற்காக மாவட்டச் செயலாளர் எஸ்பிஎம்.சையதுகான் தலைமையில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்துக்குப் பிறகாவது ஓபிஎஸ். மவுனம் கலைப்பாரா என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்நிலையில் அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய உள்ளதாகவும், தொகுதி ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

<div class="paragraphs"><p>ஓபிஎஸ்</p></div>
ஈஷா அறக்கட்டளைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in