“அதிமுக ஒன்றிணையாமல் திமுகவை வீழ்த்த முடியாது” - ஓபிஎஸ் மீண்டும் திட்டவட்டம்

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

Updated on
1 min read

சென்னை: எம்ஜிஆரின் 109-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியா ளர்களிடம் அவர் கூறியதாவது: 2026 சட்டப்பேரவை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை ஓரிரு தினங்களில் அறிவிப்பேன்.

எம்ஜிஆர் உருவாக்கிய சட்ட விதிப்படிதான் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் அதிமுகவை வளர்த்து வந்தனர். அந்த சட்ட விதிக்கு இன்று ஊறு ஏற்பட்டு இருக்கிறது. அதாவது, பொதுச் செயலாளர் என்ற தலைமைப் பதவி, தேர்தல் மூலமாக அதிமுக தொண்டர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால் இந்த சட்டவிதியை திருத்தம் செய்துள்ளனர்.

இதை எதிர்த்துதான் 6 வழக்குகள் உச்ச நீதிமன்றம் வரை சென்றது. அவை ஒருங்கிணைக்கப்பட்டு ப்பட்டு உயர் நீதிமன்றத்தில் உள்ள சிவில் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் உறுதியாக வெற்றி கிடைக்கும். அதிமுகவில் இருந்து பிரிந்து இருக்கும் சக்திகளை ஒன்றிணைக்க வேண்டும். அவ்வாறு இல்லை யெனில் இப்போது உள்ள அதிமுகவால் திமுகவை வீழ்த்த முடியாது.

பழனிசாமி பொறுப்பேற்றுக் கொண்டதில் இருந்து இதுவரை சந்தித்த 11 தேர்தல்களிலும் அதிமுக தோல்விதான் கண்டி ருக்கிறது. சர்வாதிகாரப் போக்கில், இவரை சேர்ப்போம். அவரை சேர்க்க மாட்டோம் என்று கூற யாருக்கும் அதிகாரம் இல்லை.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>ஓபிஎஸ்</p></div>
சீக்கிய மதகுரு பற்றி ஆதிஷி அவதூறாக பேசியது தடயவியல் சோதனையில் உறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in