சீக்கிய மதகுரு பற்றி ஆதிஷி அவதூறாக பேசியது தடயவியல் சோதனையில் உறுதி

ஆதிஷி

ஆதிஷி

Updated on
1 min read

புதுடெல்லி: சீக்​கிய மதகுரு பற்றி டெல்லி சட்​டப்​பேரவை எதிர்க்​கட்சி தலை​வர் ஆதிஷி கூறியது உண்மை என தடய​வியல் சோதனை அறிக்​கை​யில் தெரிய​வந்​து உள்​ள​து.

டெல்லி சட்​டப்​பேர​வை​யில் கடந்த 6-ம் தேதி பேசிய எதிர்க்​கட்சி தலை​வர் ஆதிஷி, சீக்​கிய மத குரு பற்றி அவதூறு கருத்​துக்​களை தெரி​வித்​த​தாக சர்ச்சை எழுந்​தது. அந்த வீடியோ ஒரிஜினல் அல்ல, மாற்​றம் செய்​யப்​பட்​டவை. இதை சமூக ஊடகத்​தில் வெளி​யிட்ட அமைச்​சர் கபில் மிஸ்ரா மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும் என ஆம் ஆத்மி கட்சி கூறியது.

இதையடுத்து இந்த வீடியோவை தடய​வியல் சோதனைக்கு அனுப்ப டெல்லி சட்​டப்​பேரவை சபா​நாயகர் விஜேந்​தர் குப்தா உத்​தர​விட்​டார். இதன் அறிக்கை நேற்று வெளி​யானது. இதுகுறித்து சபா​நாயகர் விஜேந்​தர் குப்தா நேற்று கூறிய​தாவது:

ஆம் ஆத்மி கோரிக்​கையை ஏற்​று, எதிர்க்​கட்சி தலை​வர் ஆதிஷி பேசிய வீடியோவை தடய​வியல் சோதனைக்கு கடந்த 8-ம் தேதி அனுப்​பினேன். சீக்​கிய குருக்​கள் குறித்து ஆதிஷி கூறிய அவதூறு கருத்​துக்​கள் ஒரிஜினல் எனவும் அதில் எந்த மாற்​ற​மும் செய்​யப்​பட​வில்லை எனவும் தடய​வியல் அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. பஞ்​சாபில் உள்ள ஆம் ஆத்மி அரசு, தடய​வியல் சோதனையை அவசர கதி​யில் நடத்தி எப்​ஐஆர் பதிவு செய்​துள்​ளது. இதுகுறித்து சிபிஐ விசா​ரணை கோரப்​படும். இந்த அறிக்கை பஞ்​சாப் அதி​காரி​களை தவறாக பயன்​படுத்தி ஆம் ஆத்மி சதி​யில் ஈடு​பட்​டுள்​ளதை காட்​டு​கிறது. இந்த விவ​காரத்தில் ஆதிஷி மன்​னிப்பு கேட்க வேண்​டும். இவ்​வாறு அவர் தெரிவித்​தார்.

இந்த அறிக்​கையை நிராகரித்​துள்ள ஆம் ஆத்மி டெல்லி தலை​வர் சவுரப் பரத்​வாஜ், “போலி வீடியோவை பயன்​படுத்தி மத மோதலை ஏற்​படுத்த பாஜக முயற்​சிக்​கிறது. இதனால் பாஜக தலை​வர்​கள் மீது நடவடிக்​கை எடுக்​க வேண்​டும்​” என்றார்.

<div class="paragraphs"><p>ஆதிஷி</p></div>
‘மரகத நாணயம் 2’-வில் பிரியா பவானி சங்கர்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in