உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஓபிஎஸ் சந்திப்பு

உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஓபிஎஸ் சந்திப்பு
Updated on
1 min read

சென்னை: டெல்​லி​யில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவை முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் சந்​தித்​தார். தமிழக அரசி​யல் சூழ்​நிலை குறித்து அவரிடம் பேசி​ய​தாக சென்னை திரும்​பிய ஓபிஎஸ் தெரி​வித்​தார்.

அதி​முக​வில் இருந்து நீக்​கப்​பட்ட முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம், அதி​முக தொண்​டர்​கள் உரிமை மீட்​புக் குழுவை நடத்தி வரு​கிறார். அதி​முகவை ஒன்​றிணைக்​கா​விட்​டால், மக்​கள் விரும்​பும் முக்​கிய முடிவு எடுக்​கப்​படும் என்​றும் அறி​வித்​திருந்​தார்.

இந்த நிலை​யில் 2 நாட்​களுக்கு முன்​பு, அவர் டெல்லி சென்​றார். ஆடிட்​டர் குரு​மூர்த்​தி​யும் டெல்​லிக்கு சென்​றிருந்​தார். இந்​நிலை​யில், மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவை ஓபிஎஸ் நேற்று சந்​தித்து சுமார் 30 நிமிடங்​கள் பேசி​யுள்​ளார்.

இதை தொடர்ந்​து, நேற்று இரவு ஏர் இந்​தியா விமானத்​தில் டெல்​லி​யில் இருந்து சென்னை வந்த ஓபிஎஸ், சென்னை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவை மரி​யாதை நிமித்​த​மாக சந்​தித்​தேன். தமிழகத்​தின் அரசி​யல் சூழ்​நிலைகளைப் பற்றி அவரிடம் விவா​தித்​தேன்.

ஜெயலலிதா ஆட்​சிக் காலத்​தில், மழை பெய்​ததும் உடனுக்​குடன் சீரமைக்​கும் பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன. பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு நிவாரண​மும் உடனடி​யாக வழங்​கப்​படும். ஆனால், தற்​போதைய திமுக அரசு அதில் சுணக்​கம் காட்​டு​கிறது. இவ்​வாறு ஓபிஎஸ் தெரிவித்தார்.

தனிக்​கட்​சி தொடக்கமா? - அதி​முக​வில் மீண்​டும் ஓபிஎஸ்ஸை சேர்க்க முடி​யாது என பழனி​சாமி திட்​ட​வட்​ட​மாக கூறிவரு​கிறார். இந்த நிலை​யில், 2026 தேர்​தலில் தமிழகத்​தில் எப்​படி​யா​வது அதி​முக - பாஜக கூட்​டணி வெற்றி பெற வேண்​டும் என்​ப​தில் உறு​தி​யாக இருக்​கும் பாஜக, ஓபிஎஸ்​ஸின் தென் மாவட்ட வாக்கு வங்​கியை இழந்​து​விடக் கூடாது என்​ப​தி​லும் உறு​தி​யாக உள்​ளது.

அதனால், தனிக்​கட்சி தொடங்க அவருக்கு பாஜக தரப்​பில் ஆலோ​சனை வழங்​கப்​பட்​ட​தாக​வும், கட்​சியை பதிவு செய்யத்​தான் அவர் டெல்லி சென்ற​தாக​வும் தகவல் வெளியாகியுள்​ளது.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஓபிஎஸ் சந்திப்பு
சென்னை, புறநகரில் தொடர் மழை: நீர் வடியாத பகுதிகளில் பொதுமக்கள் அவதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in